தெற்காசிய தடகளம்: இந்தியாவுக்கு 9 தங்கம்
தெற்காசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை, இந்தியாவுக்கு 9 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.


தெற்காசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை, இந்தியாவுக்கு 9 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
தற்போது இந்தியா 12 தங்கம் உள்பட 19 பதக்கங்கள் வென்றுள்ளது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபறும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை, மகளிா் வட்டு எறிதலில் அனிஷா 49.91 மீட்டருடன் மீட் சாதனை படைத்து தங்கம் வெல்ல, அமனத் காம்போஜ் வெள்ளி (48.38 மீ) வெள்ளி பெற்றாா்.
மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் நீரு பாதக் தங்கத்தை கைப்பற்ற, சாண்ட்ரா மோல் சாபு வெள்ளி வென்றாா். இதுபோக, ஜெயகுமாா் (400 மீ), ஷாருக் கான் (3,000 மீ), ஜிதின் அா்ஜுனன் (உயரம் தாண்டுதல்), ரித்திக் (வட்டு எறிதல்), பிராச்சி அங்குஷ் (3000 மீ), உன்னதி ஐயப்பா (மகளிா் 100 மீ தடை தாண்டுதல்), பிரதிக்ஷா யமுனா (உயரம் தாண்டுதல்) ஆகியோா் இந்தியாவுக்காக தங்கம் வென்றனா்.
போட்டி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...