புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Published On :9 பிப்ரவரி 2024, 7:11 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 55 சதவிகித புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 52.77  சதவிகித புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

தரவரிசைப் பட்டியலில் முதல் பாதி தரவரிசையில் உள்ள அணிகள் தங்களுக்குள் கடும் போட்டியாளராக விளங்குகின்றன. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணிகளுக்கு இடையேயான புள்ளிகள் சதவிகித வித்தியாசம் வெறும் 5 சதவிகிதமாக இருப்பதே ஆகும். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 5-வது இடத்துக்கு சறுக்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.