லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

யு-19 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்துள்ளது. 

படம் | பிசிசிஐ

Published On :7 பிப்ரவரி 2024, 8:47 pm IST

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்துள்ளது. 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நேற்று (ஜனவரி 19) முதல் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்று வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரான ஆதர்ஷ் சிங் 76 ரன்கள் (6 பவுண்டரிகள்) எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக கேப்டன் உதய் சஹாரன் 64 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தார். வங்கதேசம் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரூஃப் மிரிதா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.