உயிர்பெற்றது பேஸ்பால்: தடுமாறும் இந்திய ஸ்பின்னர்கள்!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 93 ரன்கள் பின் தங்கியுள்ளது. 
சுழற்பந்தினை மடக்கி அடிக்கும் இங்கிலாந்து வீரர்
சுழற்பந்தினை மடக்கி அடிக்கும் இங்கிலாந்து வீரர்

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. இந்தியாவின் அபார பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவா்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து. 

அடுத்து ஆடிய இந்தியா 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜடேஜா 87, கே.எல்.ராகுல் 86, ஜெய்ஸ்வால் 80, அக்‌ஷர் 44 என அசத்தினார்கள்.

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து தனது பேஸ்பால் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஜாக் க்ராவ்லி 33 பந்துகளில் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க பென் டக்கெட் 39 (45) ரன்களும், ஒல்லி போப் 20 (20) ரன்களும் எடுத்து ஆடு வருகிறார்கள். 

இந்திய ஸ்பின்னர்கள் அக்‌ஷர் படேல் 5 ஓவர்களில் 40 ரன்களும் அஸ்வினின் 8 ஓவர்களில் 41 ரன்களும் இங்கிலாந்து பேட்டர்கள் விளாசியுள்ளனர். முதல் இன்னிங்ஸில் சொதப்பிய பேஸ்பால் நுணுக்கம் 2வது இன்னிங்ஸில் உயிர் பெற்றுள்ளது. 

2வது செஷன் முடிவில் இங்கிலாந்து அணி 97/1 ரன்கள் எடுத்துள்ளது. 93 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்றே ஆட்டம் முடியுமென எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து தனது வலுவான எதிர்ப்பை காட்டியுள்ளது. 

பேஸ்பால் என்பது மெக்குல்லம்மின் அதிரடி ஆட்டத்தால் அவருக்கு கிடைத்த பட்டப்பெயர். அவர் இங்கிலாந்தின் பயிற்சியாளர் ஆனதிலிருந்து இங்கிலாந்து அணி அவரைப் போலவே அதிரடியாக விளையாடுவதால் அந்தப் பெயர் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com