எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஸ்பானிஷ் கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட்!

ரியல் மாட்ரிட் அணி ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் த்ரில் வெற்றி பெற்றது.

News image
வெற்றிக் களிப்பில் ரியல் மாட்ரிட் வீரர்கள். - படம்: ஏபி
Updated On :2 ஏப்ரல் 2025, 10:16 am

DIN

ரியல் மாட்ரிட் கால்பந்து ஆடவர் அணி ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் த்ரில் வெற்றி பெற்றது.

கோபா டெல் ரே எனப்படும் ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதி லெக் 2 போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் ரியல் சோசிடாட் அணியும் மோதின.

முதலில் ரியல் சோசிடாட் அணி அபாரமாக விளையாட அடுத்ததாக மீண்டெழுந்த ரியல் மாட்ரிட் 90 நிமிஷங்களில் 4-3 என முடிந்தது.

முதல் லெக்கில் 1-0 என ரியல் மாட்ரிட் முன்னிலை வகிக்கவே மொத்தமாக 4-4 என சமநிலை வகித்தது. அதனால் போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது.

இதில் இரண்டாம் பாதியில் 115ஆவது நிமிஷத்தில் ரியம் மாட்ரிட் அணி வீரர் ரூட்ரிகர் தனது தலையால் ஹெட்டர் அடித்து அசத்தினார்.

5-4 என ரியல் மாட்ரிட் அணி ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மற்றுமொரு அரையிறுதியில் பார்சிலோனாவும் அத்லெடிகோ மாட்ரிட் அணியும் நாளை மோதுகிறது. இறுதிப் போட்டி ஏப்.26ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.