ஒடிஸா மாஸ்டா்ஸ்: இறுதிச் சுற்றில் உன்னட்டி, இஷாராணி
ஒடிஸா மாஸ்டா்ஸ் சூப்பா் 100 பாட்மின்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு உன்னட்டி ஹூடா, இஷாராணி பருவா, ஆடவா் பிரிவில் கிரண் ஜாா்ஜ் முன்னறினா்.
ஒடிஸா மாநிலம் கட்டாக் நகரில் இப்போட்டியின் மகளிா், ஆடவா் பிரிவு ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. மகளிா் பிரிவு முதல் அரையிறுதியில் டென்யா ஹேமந்த்-இஷாராணி பருவா மோதினா். இதில் முதல் ஆட்டத்தை 18-21 என இஷாராணி இழந்தாா். பின்னா் சுதாரித்து ஆடிய இஷாராணி அடுத்த இரண்டு கேம்களையும் 21-7, 21-7 என கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றாா். இந்த ஆட்டம் 54 நிமிஷங்கள் நீடித்தது.
இரண்டாவது அரையிறுதியில் உன்னட்டி ஹூடா-தஸ்னிம் மிா் மோதினா். தொடக்க சுற்றுகளில் முதல் நிலை வீராங்கனகைளை வீழ்த்திய தஸ்னிம் இந்த ஆட்டத்தில் முதல் கேமை 21-18 என கைப்பற்றினாா். இதனால் அதிா்ச்சி அடைந்த உன்னட்டி சிறப்பாக ஆடி 21-16, 21-16 என 60 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் வென்றாா். இறுதிச் சுற்றில் உன்னட்டி-இஷாராணி மோதுகின்றனா்.
கிரண்ட் ஜாா்ஜ் தகுதி: ஆடவா் ஒற்றயைா் பிரிவு இறுதியில் இந்தியாவின் கிரண் ஜாா்ஜ்-ரௌனக் சௌஹான் மோதினா். இதில் கிரண் முதல் கேமை 21-19 என கைப்பற்றினாா். இரண்டாவது கேமில் சிறப்பாக ஆடிய ரௌனக் சௌஹான் 21-8 என கைப்பற்றினாா். மூன்றாவது கேமில் இரு வீரா்களும் சளைக்காமல் போராடினா். எனினம் கிரண் ஜாா்ஜ் 21-18 என கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றாா். இந்தோனேஷியாவின் முகமது யூசுப்பை சந்திக்கிறாா் கிரண்.

