அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுகள் அறிவிப்பு! முழுவிவரம்

தேசிய விளையாட்டு விருது பெற்றவர்கள்! முழுவிவரம்..
அக்னெலோ கொலாகோ| முரளிகாந்த் | சுபாஷ் ராணா |தீபாலி தேஷ்பாண்டே
அக்னெலோ கொலாகோ| முரளிகாந்த் | சுபாஷ் ராணா |தீபாலி தேஷ்பாண்டே
Published on
Updated on
1 min read

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வென்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்ஸ் வீரர் பிரவீண் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக துரோணாச்சார்யா விருது மற்றும் அர்ஜுனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனவரி 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்க இருக்கிறார்.

அர்ஜுனா வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்:

சுச்சா சிங் (தடகளம்), முரளிகாந்த் ராஜாராம் பெட்கர் (பாரா-நீச்சல்).

துரோணாச்சார்யா விருது:

சுபாஷ் ராணா (பாரா-துப்பாக்கி சுடுதல்), தீபாலி தேஷ்பாண்டே (துப்பாக்கி சுடுதல்), சந்தீப் சங்வான் (ஹாக்கி).

துரோணாச்சார்யா வாழ்நாள் சாதனையாளர் விருது:

எஸ்.முரளிதரன் (பேட்மிண்டன்), இந்திய கால்பந்து அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ.

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா: குகேஷ் (செஸ்), ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீன் குமார் (பாரா தடகளம்), மனு பாக்கர் (துப்பாக்கி சுடுதல்).

அர்ஜுனா விருதுகள்:

  • ஜோதி யர்ராஜி (தடகளம்)

  • அன்னு ராணி (தடகளம்)

  • நிது (குத்துச்சண்டை)

  • சாவீட்டி (குத்துச்சண்டை)

  • வந்திகா அகர்வால் (செஸ்)

  • சலிமா டெட்டே (ஹாக்கி)

  • அபிஷேக் (ஹாக்கி)

  • சஞ்சய் (ஹாக்கி)

  • ஜர்மன்பிரீத் சிங் (ஹாக்கி)

  • சுக்ஜீத் சிங்(ஹாக்கி)

  • ராகேஷ் குமார்(பாரா-வில்வித்தை)

  • ப்ரீத்தி பால் (பாரா தடகளம்)

  • ஜீவன்ஜி தீப்தி (பாரா தடகளம்)

  • அஜீத் சிங் (பாரா தடகளம்)

  • சச்சின் சர்ஜேராவ் கிலாரி (பாரா தடகளம்)

  • தரம்பிர் (பாரா தடகளம்)

  • பிரணவ் சூர்மா (பாரா தடகளம்)

  • எச்.ஹோகடோ செமா (பாரா தடகளம்)

  • சிம்ரன் (பாரா தடகளம்)

  • நவ்தீப் சிங் (பாரா-தடகளம்)

  • துளசிமதி முருகேசன் (பாரா தடகளம்)

  • நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பாரா-பேட்மிண்டன்)

  • மனிஷா ராமதாஸ் (பாரா-பேட்மிண்டன்)

  • கபில் பர்மர் (பாரா-ஜூடோ)

  • மோனா அகர்வால் (பாரா-துப்பாக்கி சுடுதல்)

  • ரூபினா பிரான்சிஸ் (பாரா-துப்பாக்கி சுடுதல்)

  • ஸ்வப்னில் குஷேல் (துப்பாக்கி சுடுதல்)

  • சரப்ஜோத் சிங் (துப்பாக்கி சுடுதல்)

  • அபய் சிங் (ஸ்குவாஷ்)

  • சஜன் பிரகாஷ் (நீச்சல்)

  • அமன் ஷெராவத் (மல்யுத்தம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com