2 கோல்கள், 2 அசிஸ்ட்ஸ்: இன்டர் மியாமிக்காக மெஸ்ஸி புதிய சாதனை!

இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி நிகழ்த்திய புதிய சாதனை குறித்து...
Inter Miami forward Lionel Messi (10) chases down a pass during the first half of an MLS soccer match against Columbus Crew
கால்பந்தினை துரத்தி செல்லும் லியோனல் மெஸ்ஸி...படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இன்டர் மியாமி அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அந்த் அணிக்காக குறைவான போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார்.

இன்றைய எம்எல்எஸ் தொடரில் கொலம்பஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் (15’, 24’) 2 அசிஸ்ட்ஸ் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இதன் மூலம் எம்எல்எஸ் தொடரில் அதிக கோல்கள் (31) அடித்த இன்டர் மியாமி வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பாக 29 கோல்களுடன் கோன்சலோ ஹிகுயின் 70 போட்டிகளில் அடித்திருந்தார். மெஸ்ஸி அதனை 38 போட்டிகளில் முறியடித்துள்ளார்.

இன்டர் மியாமி அணிக்காக மொத்த போட்டிகளிலும் மெஸ்ஸி 59 போட்டிகளில் 49 கோல்களும், 23 அசிஸ்ட்ஸும் செய்து அசத்தியுள்ளார்.

கோல்கள் மட்டுமில்லாமல் அசிஸ்ட்ஸிலும் மெஸ்ஸியே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 5-1 என அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com