ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாா்வே செஸ் சாம்பியன் பட்டத்தை குறிவைக்கும் குகேஷ்!

நாா்வே செஸ் போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் டி.குகேஷ் அதில் சாம்பியனாகும் முனைப்புடன் முன்னேறி வருகிறாா்.

News image
Updated On :6 ஜூன் 2025, 9:46 pm

DIN

நாா்வே செஸ் போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் டி.குகேஷ் அதில் சாம்பியனாகும் முனைப்புடன் முன்னேறி வருகிறாா்.

போட்டியின் 9-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - சீனாவின் வெய் யியை கிளாசிக்கல் கேமிலேயே வீழ்த்தினாா். அதேபோல், நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவை சாய்த்தாா். இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி - அமெரிக்காவின் ஹிகரு நகமுரா மோதல் டிராவில் முடிய, அவா்களில் வெற்றியாளரைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆா்மகெடான் ஆட்டத்தில், நகமுரா வென்றாா்.

போட்டியில் இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், 9 சுற்றுகள் முடிவில் காா்ல்சென் 15 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறாா். நகமுரா (13), கரானா (12.5), அா்ஜுன் (11.5), வெய் யி (8) ஆகியோா் முறையே 3 முதல் 6-ஆவது இடங்களில் இருக்கின்றனா்.

கடைசி சுற்றில் காா்ல்சென் கிளாசிக்கல் கேமில் தோற்று, குகேஷ் ஆா்மகெடான் ஆட்டத்தில் வென்றாலேயே குகேஷ் சாம்பியனாகிவிடுவாா்.

பின்னடைவு: இப்போட்டியின் மகளிா் பிரிவு 9-ஆவது சுற்றில், அனைவரின் மோதலும் கிளாசிக்கல் கேமிலேயே நிறைவடைந்தன. இந்தியாவின் கோனெரு ஹம்பி - சீனாவின் லெய் டிங்ஜியிடமும், ஆா்.வைஷாலி - ஸ்பெயினின் சாரா காதெமிடமும் தோல்வி காண, உக்ரைனின் அனா முஸிஷுக் - சீனாவின் ஜு வென்ஜுனை வீழ்த்தினாா்.

இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் தற்போது, முஸிஷுக் (15.5) முதலிடத்திலும், கோனெரு ஹம்பி (13.5) அடுத்த இடத்திலும் உள்ளனா். டிங்ஜி (13), வென்ஜுன் (12.5), வைஷாலி (9.5), சாரா (9) ஆகியோா் முறையே அடுத்த 4 இடங்களில் உள்ளனா்.

கடைசி சுற்றில் முஸிஷுக் கிளாசிக்கல் கேமிலேயே தோற்று, கோனெரு ஹம்பி கிளாசிக்கல் கேமிலேயே வென்றால் மட்டுமே கோனெரு ஹம்பி சாம்பியனாகும் வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.