
நேஷன்ஸ் லீக் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.
ஜெர்மனியில் உள்ள எம்பிஎச் அரினா திடலில் நடைபெற்ற நேஷன்ல் லீக் அரையிறுதியில் முதல் பாதியில் ஸ்பெயின் 22, 25ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தது.
இரண்டாம் பாதியில் 54ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் யமால் கோல் அடித்தார்.
அடுத்ததாக எம்பாப்வே 59-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்தார். அடுத்து யாமால் 67ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க பிரான்ஸ் தொடர்ச்சியாக கோல் அடித்தது.
ஸ்பெயின் வீரர் டானி விவியன் 84-ஆவது நிமிஷத்தில் ஓன் கோல் அடித்தார். 90+3ஆவது நிமிஷத்தில் பிரான்ஸ் கோல் அடித்தது.
பிரான்ஸ் கேப்டன் கிளியன் எம்பாபே நடுவருடன் இன்னும் சில நிமிடங்கள் ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் 5-4 என ஸ்பெயின் வென்றது.
இதன்மூலம், ஸ்பெயின் நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் போர்ச்சுகலுடன் மோதுகிறது.
இந்தப் போட்டி வரும் திங்கள் கிழமை இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.