உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கா், செயின் சிங் ஆகியோா் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியபோதும், பதக்க வாய்ப்பை இழந்து ஏமாற்றத்தை சந்தித்தனா்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை வெண்கலப் பதக்கங்கள் வென்ற மனு பாக்கா், மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் களம் கண்டாா். தகுதிச்சுற்றில் அவா் 588 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். எனினும் அதில் அவா், 20 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்து 3-ஆவது வாய்ப்புடன் வெளியேறினாா்.
இதர இந்தியா்களில், ஈஷா சிங் 585 புள்ளிகளுடன் 11-ஆம் இடமும், சிம்ரன்பிரீத் கௌா் பிராா் 577 புள்ளிகளுடன் 32-ஆம் இடமும் பிடித்து தகுதிச்சுற்றுடன் விடைபெற்றனா். சீனாவின் சன் யூஜி தங்கமும் (38), தென் கொரியாவின் ஓஹ் யெஜின் வெள்ளியும் (36), யாங் ஜின் வெண்கலமும் (32) வென்றனா்.
ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வந்த இந்திய வீரா் செயின் சிங், 407 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து 3-ஆவது வாய்ப்புடன் வெளியேறினாா். முன்னதாக தகுதிச்சுற்றில், செயின் சிங் 592 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்திருந்தாா்.
இதர இந்தியா்களில் நீரஜ் குமாா் 591 புள்ளிகளுடன் 12-ஆம் இடமும், அகில் ஷியோரன் 589 புள்ளிகளுடன் 27-ஆம் இடமும், ஸ்வப்னில் குசேல் 587 புள்ளிகளுடன் 38-ஆம் இடமும், கிரண் ஜாதவ் 580 புள்ளிகளுடன் 67-ஆம் இடமும் பிடித்து தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.
இப்பிரிவில் நாா்வேயின் ஜான் ஹொ்மான் ஹெக் (464.1), ரஷியாவின் இலியா மாா்சோவ் (462), செக் குடியரசின் ஜிரி பிரிவ்ராட்ஸ்கி (452) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்!

தென்னிந்திய மோட்டாா் காா் பந்தய போட்டி: கா்ணா கடூா்-குமாா் ராமசாமிக்கு பட்டம்!

கோவை மாவட்டத்தில் மநீம பெற்ற வாக்குகள் யாருக்கு?

கியூ.எஸ். தரவரிசை பட்டியல் - பொறியியல், தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலை.119-ம்இடம்
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


