மேலாடையின்றி மகனுடன் ரொனால்டோ பகிர்ந்த புகைப்படம்..!

கால்பந்து வீரர் ரொனால்டோ பகிர்ந்த புகைப்படம் குறித்து...
Ronaldo with his son photo viral
மேலாடையின்றி மகனுடன் ரொனால்டோ பகிர்ந்த புகைப்படம்.படம்: இன்ஸ்டா / ரொனால்டோ.
Published on
Updated on
1 min read

கால்பந்து வீரர் ரொனால்டோ அவரது மகனுடன் மேலாடையின்றி பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 40 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். தினமும் உடற்பயிற்சி செய்து இளம் வீரர்களுக்கு சவால் அளிக்கிறார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி ரொனால்டோ தலைமையில் கோப்பை வென்றது.

உலக அளவில் ரொனால்டோ அதிக கோல்களை அடித்து சாதனை புரிந்துள்ளார்.

1,000 கோல்கள் அடிப்பதை தனது கனவு எனக் கூறிய ரொனால்டோ தற்போது 937 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

சௌதி லீக்கில் அல்-நசீர் அணிக்காக விளையாடிவரும் ரொனால்டோ அடுத்த சீசனில் எங்கு விளையாடுவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதே அணியில் தொடருவார் என்றே எதிர்பார்க்கபடுகிறது.

கிளப் உலகக் கோப்பையில் பங்கேற்க அவரை பல அணிகள் அணுகியதாகவும் அவர் எந்த அணியில் கலந்துகொள்ள ஆர்வமில்லை எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோ மகனுடன் ஆடையின்றி சிக்ஸ் பேக் உடன் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில், “தந்தையைப் போலவே மகன்” என போர்ச்சுகல் பழமொழியைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com