
ஒரே போட்டியில் 8 கோல்களை தடுத்து அசத்தியுள்ள பார்சிலோனா வீரருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
போலந்து நாட்டைச் சேர்ந்த வோஜ்சீச் ஸ்செஸ்னிதற்போது பார்சிலோனா அணிக்காக கோல் கீப்பராக விளையாடி வருகிறார்.
34 வயதாகும் இவர் நேற்று நடந்த பென்பிசியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 8 கோல்களை தடுத்து தனது 8ஆவது கிளீன் ஷீட்டை எடுத்துள்ளார் ஸ்செஸ்னி.
14 போட்டிகளில் இது 8ஆவது கிளீன் ஷீட் ஆகுமென்பது குறிப்பிடத்தக்கது.
கிளீன் ஷீட் என்பது எதிரணியினர் ஒரு கோல்கூட அடிக்காமல் தடுப்பதாகும்.
பார்சிலோனா அணி வீரர் குபார்சி 22ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு வாங்கி வெளியேற 10 வீரர்களுடன் சிறப்பாக விளையாடியது.
ரபின்ஹா 61ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் 1-0 என பார்சிலோனா அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஸ்கெஸ்னி தடுத்த ஒவ்வொரு கோல்களையும் பலரும் வியந்து பாராட்டி வருகிறார்கள்.
இது குறித்து ஸ்செஸ்னி, “இது எனது சிறந்த போட்டி இல்லை. இனிமேல்தான் அது வரும். கவலை வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.