மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நண்பருடன் இணைந்து கால்பந்து கிளப்பை தொடங்கிய மெஸ்ஸி..!

கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது நண்பர் சௌரஸ் உடன் இணைந்து புதிய கால்பந்து கிளப்பை தொடங்கியுள்ளார்.

News image

லூயிஸ் சௌரஸ், லியோனல் மெஸ்ஸி.

படங்கள்: இன்ஸ்டா / லூயிஸ் சௌரஸ்

Updated On :28 மே 2025, 11:22 am

DIN

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது நண்பர் லுயிஸ் சௌரஸ் உடன் இணைந்து புதிய கால்பந்து கிளப்பை தொடங்கியுள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37), உருகுவே நாட்டைச் சேர்ந்த லூயிஸ் சௌரஸ் (38) இருவரும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய காலத்தில் இருந்தே சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள்.

பார்சிலோனா அணியைவிட்டுப் பிரிந்த இருவரும் தற்போது இண்டர் மியாமி அணிக்காக ஒன்றாக விளையாடி வருகிறார்கள்.

களத்தில் மட்டுமே பார்ட்னர்களாக இருந்த இவர்கள் தற்போது தொழிலும் பார்ட்னராக மாறியுள்ளார்கள்.

உருகுவேயில் எல்எஸ்எம் என்ற நான்காம் டிவிஷன் கால்பந்து கிளப்பை உருவாக்கியுள்ளார்கள்.

இது குறித்து லூயிஸ் சௌரஸ், “டிபார்டிவோ எல்எஸ் என்ற கனவு 2018இல் தொடங்கியது. இதில் 3,000க்கும் அதிகமானோர்கள் இதில் இணைந்துள்ளார்கள். நான் வளர்ந்து பிறந்த உருகுவே நாட்டில் ஆர்வமுள்ள இளம் கால்பந்து வீரர்களுக்கு வாய்ப்பை உருவாக்கவே இதைத் தொடங்கினேன்” என்றார்.

இது குறித்து மெஸ்ஸி, “என்னைத் தேர்ந்தெடுத்ததிற்காக நான் மகிழ்ச்சியும் பெருமையும் படுகிறேன். இதில் உன்னுடன் எல்லாவற்றிலும் உடனிருந்து வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்” எனக் கூறினார்.

மெஸ்ஸியின் பங்கு என்னவென தெளிவாகக் குறிப்பிடாவிட்டாலும் உருகுவேயின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மெஸ்ஸியை ஒரு பார்ட்னராகவே குறிப்பிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.