ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

10-ஆவது முறையாக கிங்ஸ் கோப்பையை வென்ற அல்-இத்திஹாத்..! தொடர் நாயகனாக கரீம் பெஞ்சமா!

அல்-இத்திஹாத் கிளப் சௌதி கிங்ஸ் கோப்பையை வென்றது குறித்து...

News image

சௌதி கோப்பையுடன் அல்-இத்திஹாத் அணியினர்.

படம்: எக்ஸ் / அல்-இத்திஹாத் கிளப்.

Updated On :31 மே 2025, 9:38 am

DIN

சௌதியின் கிங்ஸ் கோப்பையை அல்-இத்திஹாத் கிளப் 10-ஆவது முறையாக வென்று அசத்தியது.

சௌதி அரேபியாவின் பழைமையான போட்டிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் கோப்பை என்று அழைக்கப்படும் இந்த கிங்ஸ் கோப்பை அரசர்களின் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் இறுதிப் போட்டியில் அல்-இத்திஹாத் உடன் அல்-காத்சியா மோதியது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் அல்-இத்திஹாத் வென்றது.

இந்தப் போட்டியில் கரீம் பெஞ்சமா 34, 90+4ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். ஹைஸீம் அவோரா 43ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

முதல் பாதியின் கடைசியில் பெனால்டியில் அல்-காத்சியா அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. 81ஆவது நிமிஷத்தில் இந்த அணியினருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதால் 10 பேருடனே கடைசி சில நிமிஷங்களை விளையாடியது.

போட்டியின் 80-ஆவது நிமிஷத்தில் அல்-காத்சியா அணியின் ஔபமேயாங் அடித்த கோலை கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார்.

61 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த அல்-இத்திஹாத் அணி 89 சதவிகித துல்லியமாக பந்தினை பாஸ் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு பேலன் தோர் விருது பெற்ற கரீம் பெஞ்சமா இந்த சீசனின் தொடர் நாயகன் விருது பெற்றார்.

அல்-இத்திஹாத் அணி இந்த சீசனில் சௌதி புரோ லீக்கையும் 10-ஆவது முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.