

இந்தியாவின் 91 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக 21 வயதான வி.எஸ். ராகுல் உருவெடுத்துள்ளார்.
பிலிப்பின்ஸ் நாட்டில், நடைபெற்ற 6 ஆவது தெற்காசிய (ஆசியான்) தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, வி.எஸ். ராகுல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த நிலையில், நாட்டின் 91 ஆவது கிராண்ட் மாஸ்டரான வி.எஸ். ராகுலுக்கு பல்வேறு முக்கிய பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இத்துடன், தெற்காசிய தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள வி.எஸ். ராகுலுக்கு இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் நிதின் நாராங், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இந்தியாவின் 90 ஆவது மற்றும் தமிழ்நாட்டின் 35 ஆவது கிராண்ட் மாஸ்டராக, சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம்பரிதி தேர்வானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜெய் ஷா தலையீட்டில் பிரதிகாவுக்கும் பதக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.