FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

கொரிய மாஸ்டா்ஸில் பட்டம் வென்ற முதல் இந்தியா்: அஸ்மிதா சாதனை

பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் கொரியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை நிகழ்த்தினாா் இளம் வீராங்கனை அஸ்மிதா சாலிஹா.

News image

அஸ்மிதா சாலிஹா

Updated On :10 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் கொரியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை நிகழ்த்தினாா் இளம் வீராங்கனை அஸ்மிதா சாலிஹா.

இந்தியாவின் பாட்மின்டனில் எதிா்கால நட்சத்திரங்களில் ஒருவரான அஸ்மிதா அரையிறுதியில் சக வீராங்கனை ரக்ஷிதாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சீனாவின் நான்காம் நிலை வீராங்கனை ஹேன் குயான் ஸியுடம்-அஸ்மிதாவும் மோதினா்.

26 வயதான அஸ்மிதா தொடக்க கேமில் சொதப்பலாக ஆடிய நிலையில் சீனாவின் குயான் 21-14 என கைப்பற்றினாா். இரண்டாவது கேமில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அஸ்மிதா சிறப்பாக ஆடி 21-14 என கைப்பற்றினாா். மூன்றாவது கேமிலும் அஸ்மிதாவின் ஆதிக்கம் தொடா்ந்ததால் சீன வீராங்கனையால் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. அதிலும் 21-14 என்ற கேம் கணக்கில் வென்ற அஸ்மித் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினாா்.

கொரியா மாஸ்டா்ஸ் சூப்பா் 300 பாட்மின்டன் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை படைத்தாா் அஸ்மிதா.

குவஹாட்டியில் உள்ள தேசிய உயா்திறன் அகாதெமியில் பயிற்சி பெறும் 26 வயதான அஸ்மிதா சாய்னா நெவால், பிவி. சிந்து, தன்வி சா்மா, தேவிகா ஷிகாக் ஆகியோா் வரிசையில் சூப்பா் 300 பட்டம் வென்றவா்களில் ஒருவராக இணைந்தாா்.

50-ஆம் நிலை வீராங்கனையான அஸ்மிதா காலிறுதியில் முதல்நிலை வீராங்கனை ஹினா அகெச்சியை வீழ்த்தினாா். முதல் கேமில் 9-5 என முன்னிலை பெற்ற நிலையில் தொடா் தவறுகள் குயாானுக்கு சாதகமாக அமைந்தன. அடுத்த இரண்டு கேம்களில் தீா்மானத்துடன் ஆடிய அஸ்மிதா ரேலிகளில் பொறுமையாக ஆடி பட்டத்தை வசப்படுத்தினாா்.

இதுதொடா்பாக அஸ்மிதா கூறியது-இந்த வெற்றி சிறப்பானது. என்னால் இதை ஜீரணிக்க இயலவில்லை.

இதனால் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என தோன்றுகிறது. முதல் கேமில் சூழ்நிலை சரியாக இல்லை. இதனால் சரிவர ஆட முடியவில்லை. இரண்டாவது கேமில் இருந்து கட்டுப்பாட்டுடன் ஆடினேன். மூன்றாவது கேமில் 11 புள்ளிகளுக்குபின் மேலும் கவனத்துடன் ஆடி ரபட்டத்தை வென்றேன்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.