தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

காலிறுதிக்கு முன்னேறியது நார்த்ஈஸ்ட் யுனைடெட்!

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஸ்ரீநகர் எஃப்சி1 அணியை வீழ்த்தியது.

News image

காலிறுதிக்கு முன்னேறியது நார்த்ஈஸ்ட் யுனைடெட் - X | Indian Football

Updated On :12 ஆகஸ்ட் 2026, 5:38 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஸ்ரீநகர் எஃப்சி1 அணியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் அணிக்காக பார்த்திப் சுந்தர் கோகோய் 11 மற்றும் 54-ஆவது நிமிஷங்களிலும், அலாதீன் அஜாரே 68-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனர்.

ஸ்ரீநகர் அணிக்காக முகமது இலியாஸ் 71-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார். இந்த வெற்றியை அடுத்து நார்த்ஈஸ்ட் அணி தொடர்ந்து 3 வெற்றிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்ரீநகர் எஃப்சி 2-ஆவது தோல்வியுடன் போட்டியிலிருந்து வெளியேறியது.

நாங்சே வெற்றி: மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் நடைபெற்ற 31-ஆவது ஆட்டத்தில், நாங்சே எஸ்எஸ் & சிசி அணி 7-0 கோல் கணக்கில் மும்பை எஃப்சியை அபார வெற்றி கண்டது.

அந்த அணிக்காக ஹார்டி கிளிஃப் (11', 79'), கிட்போகிளாங் பாலே (41'), செஸ்டர்பால் லிங்டோ (56'), தவன்சா கார்லோஸ் (77', 82'), ஷீன் ஸ்டீவன்சன் (89') ஆகியோர் கோல் அடித்தனர்.

நாங்சே அணி முதல் வெற்றியுடன் காலிறுதி நம்பிக்கையில் இருக்க, மும்பை அணி 3-ஆவது தோல்வியுடன் வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.