ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான 100% டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன!

உலகக் கோப்பையில் மோதும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்து...

News image

இந்திய ஹாக்கி அணியினர். - படம்: எக்ஸ் / பிஏஐ மீடியா.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 9:31 pm IST

உலகக் கோப்பையில் மோதும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்பனை ஆகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1973 வரலாற்றுச் சிறப்புமிக்க அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு நெதர்லாந்தில் இருக்கும் வாக்னர் ஹாக்கி திடலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை (ஆக.19) மோதவிருக்கின்றன.

1973ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 1-0 என வென்றது.

இந்தியா - பாகிஸ்தான் 1971ஆம் ஆண்டு போர் நடைபெற்றதால் 1973 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.

இந்த நிலையில், 10,000 பார்வையாளர்கள் அமைந்து பார்க்கும் வாக்னர் திடலில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இந்த டிக்கெட்டுகள் செப்டம்பர் 2025 முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. முதல் கட்ட டிக்கெட்டுகள் செப்டம்பரிலும் அடுத்த கட்டமாக மார்ச்சிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தன என கேன்ஹெச்பி தெரிவித்துள்ளது.

இந்த டிக்கெட்டுகளின் விலை 35 யூரோஸ் முதல் 57 யூரோஸ் வரை விற்கப்பட்டுள்ளன. உயர்தர டிக்கெட்டுகள் 251.34 யூரோஸுக்கு விற்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் வாழும் இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்த மக்கள் இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் கிடைக்காத நிலையில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கிற்கு ஆதரவு தெரிவிப்போமென அங்கிருக்கும் மக்கள் கூறியுள்ளார்கள்.

முன்னதாக, நெதர்லாந்து போட்டியின்போது இந்தத் திடலில் முழுமையான டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

India-Pakistan FIH World Cup clash sold out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.