
ஜோகோவிச்/சபலென்கா ஜோடி தோல்வி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், கலப்பு இரட்டையா் பிரிவில் நம்பா் 1 ஜோடியான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்/பெலாரஸின் அரினா சபலென்கா முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

ஜோகோவிச் - கோப்புப் படம்
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், கலப்பு இரட்டையா் பிரிவில் நம்பா் 1 ஜோடியான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்/பெலாரஸின் அரினா சபலென்கா முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில், கலப்பு இரட்டையா் முதல் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதில், ஜோகோவிச்/சபலென்கா இணை 4-1, 2-4, 2-10 என்ற செட்களில், பிரிட்டனின் ஹென்றி பேட்டன்/செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா கூட்டணியிடம் தோல்வியுற்றது.
மற்றொரு ஆட்டத்தில், கணவன் - மனைவியான பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ்/உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஜோடி 4-1, 4-1 என்ற நோ் செட்களில், கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிம்/பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா கூட்டணியை வீழ்த்தியது.
அதேபோல், செக் குடியரசின் கரோலினா முசோவா/ஜேக்கப் மென்சிக் இணை 4-1, 2-4, 10-7 என்ற வகையில், பிரான்ஸின் கிறிஸ்டினா மடெனோவிச்/எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ கூட்டணியை வெளியேற்றியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





