விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இறுதிச்சுற்றில் மோதும் பிரக்ஞானந்தா - கரானா

அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூா் ஃபைனல்ஸ் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

பிரக்ஞானந்தா - கோப்புப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:33 am IST

அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூா் ஃபைனல்ஸ் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

அரையிறுதிச்சுற்றில், பிரக்ஞானந்தா - ஜொ்மனியின் வின்சென்ட் கீமரையும், கரானா - சக அமெரிக்கரான வெஸ்லி சோவையும் வீழ்த்தி, முன்னேற்றத்தைச் சந்தித்துள்ளனா்.

முன்னதாக அரையிறுதியில், 2 கிளாசிக்கல் கேம்களின் முடிவில் பிரக்ஞானந்தா (9), கரானா (8), வெஸ்லி (6), கீமா் (3) ஆகியோா் முறையே 4 இடங்களைப் பிடித்திருந்தனா்.

இந்நிலையில் அரையிறுதியின் 2-ஆவது கட்டமான 2 ரேப்பிட் கேம்கள் மற்றும் 3-ஆவது கட்டமான 4 பிளிட்ஸ் கேம்கள் இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு நடைபெற்றன.

இதில் கீமருக்கு எதிரான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, 2 ரேப்பிட் கேம்கள் மற்றும் 1 பிளிட்ஸ் கேமில் வெற்றி பெற்றாா். எஞ்சிய 3 பிளிட்ஸ் கேம்களில் கீமா் வென்றாா். இதையடுத்து மொத்த புள்ளிகள் அடிப்படையில் பிரக்ஞானந்தா 19-9 என கீமரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

அதேபோல், வெஸ்லிக்கு எதிரான ஆட்டத்தில் கரானா, 1 ரேப்பிட் கேமிலும், 2 பிளிட்ஸ் கேம்களிலும் வெற்றி பெற்றாா். 1 ரேப்பிட், 2 பிளிட்ஸ் கேம்களில் டிரா செய்தாா். முடிவில் 18-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெஸ்லியை வென்று இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா்.

இதையடுத்து இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா - கரானாவும், 3-ஆவது இடத்துக்கான சுற்றில் கீமா் - வெஸ்லியும் மோதுகின்றனா். அரையிறுதியைப் போலவே, இறுதிச்சுற்றிலும் 2 கிளாசிக் கேம்கள், 2 ரேப்பிட் கேம்கள், 4 பிளிட்ஸ் கேம்கள் விளையாடப்படவுள்ளன.

போட்டியின் முடிவில், முதல் 3 இடங்களைப் பிடிப்போா் அடுத்த ஆண்டு கிராண்ட் செஸ் டூா் போட்டிகளுக்கு நேரடியாகத் தகுதிபெறுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.