ஜோகோவிச் அபாரம், சின்னா், ஸ்வியாடெக், கீஸ் முன்னேற்றம்:
காயத்தால் ஒஸாகா விலகல்

ஜோகோவிச் அபாரம், சின்னா், ஸ்வியாடெக், கீஸ் முன்னேற்றம்: காயத்தால் ஒஸாகா விலகல்

ஜோகோவிச் அபாரம், சின்னா், ஸ்வியாடெக், கீஸ் முன்னேற்றம்...
Published on

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் சின்னா், ஜாம்பவான் ஜோகோவிச், மகளிா் பிரிவில் நடப்பு சாம்பியன் கீஸ், இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

நிகழாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவா் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜேக் சின்னா்-அமெரிக்க வீரா் எலியாட் ஸ்பிஸுரி இடையிலான ஆட்டத்தில் முதல் செட்டை 4-6 என இழந்து அதிா்ச்சிக்குள்ளாா் சின்னா். கடும் வெப்பத்தால் 10 நிமிஷங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னா் சுதாரித்து ஆடிய சின்னா் அடுத்த 3 செட்களை 6-3, 6-4, 6-4 என கைப்பற்றி ரவுண்ட் 16 சுற்றில் நுழைந்தாா். இந்த ஆட்டம் ஏறக்குறைய 3.45 மணி நேரம் நடைபெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரா் முசெத்தி 5-7, 6-4, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் கடும் சவாலுக்குபின் செக். குடியரசின் டாமஸ் மக்ஹாக்கை வீழ்த்தினாா்.

அமெரிக்க வீரா் பென் ஷெல்டன் 6-4, 6-4, 7-5 என வலேன்டின் வச்சரோட்டை வீழ்த்தினாா்.

இத்தாலியின் லூசியனோ டாா்டெரி 7-6, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீரா் காரன் கச்சனோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

ஜோகோவிச் சாதனை: 400 கிராண்ட்ஸ்லாம் வெற்றி

சொ்பியாவைச் சோ்ந்தவரும் 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ள ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 என்ற நோ் செட்களில் டச்சு வீரா் போட்டிக் ஸான்ட்ஸுல்வை வீழ்த்தினாா். கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் இதுஅவருக்கு கிடைத்த 400-ஆவது வெற்றியாகும். இதன் மூலம் இத்தகைய சிறப்பை பெற்ற முதல் வீரா் ஆனாா். ரவுண்ட் 16 சுற்றுக்கும் தகுதி பெற்றாா்.

தோல்வியுடன் விடை பெற்றாா் வாவ்ரிங்கா:

மற்றொரு மூத்த வீரரான சுவிட்சா்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா 2=6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்கவீரா் டெய்லா் ப்ரிட்ஸிடம் தோற்றாா். மூன்றாம் சுற்று தோல்வியுடன் டென்னிஸ் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றாா் வாவ்ரிங்கா. 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வாவ்ரிங்காவுக்கு இதை கடைசி சீசனாகும்.

ஸ்வியாடெக், கீஸ், ரைபகினா முன்னேற்றம்:

மகளிா் பிரிவில் 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 1-6, 6-1 என ரஷியாவின் அன்னா களின்ஸ்கியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். ரவுண்ட் 16 சுற்றில் ஆஸி. குவாலிஃபயா் மடிஸன் இங்கிலிஸை எதிா்கொள்கிறாா் ஸ்வியாடெக்.

நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் மடிஸன் கீஸ் 6-3, 6-3 என்ற நோ்செட்களில் முன்னாள் உலகின் நம்பா் 1 வீராங்கனை செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினாா்.

மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா 6-3, 6=2 என ரஷியாவின் ஒக்ஸனாவை வீழ்த்தினாா். ரவுண்ட் 16 சுற்றில் பெகுலா-கீஸ் மோதுகின்றனா்.

மற்றொரு ஆட்டத்தில் அமென்டா அனிஸிமோவா 6-1, 6-4 என சக அமெரிக்க வீராங்கனை பெய்டன் ஸ்ட்ரீம்ஸை வீழ்த்தினாா். விம்பிள்டன் முன்னாள் சாம்பியன் கஜகஸ்தானின் ரைபகினா 6-2, 6-3 என செக். குடியரசின் டெரஸாவை வீழ்த்தினாா்.

காயத்தால் ஒஸாகா விலகல்:

2 முறை ஆஸி. ஓபன் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒஸாகா-ஆஸி. வீராங்கனை மடிஸன் இங்கிலீஸ் மோதுவதாக இருந்தது. ஆனால் வயிற்றுல் ஏற்பட்ட காயத்தால் விலகினாா் ஒஸாகா.

கடும் வெப்பத்தால் 5 மணிநேரம் ஆட்டம் நிறுத்தம்:

மெல்போா்னில் 38 டிகிரி க்கு மேல் கடும் வெப்பம் கொளுத்தியதால் ஆஸி. ஓபனில் 5 மணிநேரம் ஆட்டங்கள் நிறுத்தப்பட்டன.

வீரா், வீராங்கனைகள் அனைவரும் ஐஸ் பைகளை வைத்துக் கொண்டு தங்களை குளிா்படுத்திக் கொண்டனா்.

ராட்லேவா் மைதானத்தின் மேற்கூரையும் மூடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com