கால்பந்து உலகக் கோப்பை 2026ன் தங்கப் பந்து, தங்கக் காலணி விருது விருது பெறும் பட்டியலில் ஆர்ஜென்டீனாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த இரண்டு விருதில் ஒரு விருது உறுதியாகிவிட்டது. இறுதிப் போட்டி வென்றால் இரண்டு விருதுமே மெஸ்ஸிக்கு கிடைக்கும். இதுவரை மூன்று பேர் மட்டுமே இந்த இரண்டு விருதுகளையும் ஒரே உலகக் கோப்பையில் வென்றுள்ளார்கள்.
கோல்டன் பூட் (தங்கக் காலணி) விருது என்பது உலகக் கோப்பை தொடர் முழுவதும் அதிக கோல்கள், அதிக அசிஸ்ட்டுகள் செய்பவர்களுக்கு அளிக்கப்படும். தற்போதைக்கு இந்தப் பட்டியலில் மெஸ்ஸி 8 கோல்கள், 4 அசிஸ்ட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
எம்பாபே 8 கோல்கள், 3 அசிஸ்ட்டுகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில்தான் ஸ்பெயின் வீரர் இருக்கிறார். மற்றவர்கள் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை என்பதால் இந்த விருது மெஸ்ஸிக்கு உறுதியாகிவிட்டது.
கோல்டன் பால் (தங்கப் பந்து) விருது என்பது உலகக் கோப்பை முழுவதும் சிறப்பாக விளையாடும் நபருக்கு ஃபிஃபாவின் வல்லுநர் குழு மதிப்பீட்டின்படி வழங்கப்படும். இந்த விருதிலும் மெஸ்ஸி முன்னிலையில் இருக்கிறார். ஏனெனில், ஐந்து ஆட்ட நாயகன் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார்.
இதுவரை ஒரே எடிஷனில் இரண்டு விருதுகளையும் வென்றவராக மூன்று பேர் மட்டுமே இருக்கிறார்கள். மரியோ கெம்பேஸ் (ஆர்ஜென்டீனா) 1978, பாலோ ரோஸி (இத்தாலி) 1982, சால்வட்டோர் ஷில்லாச்சி (இத்தாலி) 1990களில் வென்றுள்ளார்கள்.
இந்தமுறை லியோனல் மெஸ்ஸியும் நான்காவது வீரராக இந்த இரண்டு விருதுகளையும் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி தங்கப் பந்து மட்டுமே வென்றார், எம்பாபே தங்கக் காலணி வென்றிருந்தார்.
The adidas Golden Boot heading into the final round of fixtures ð#FIFAWorldCup pic.twitter.com/HeIJwK9nR4
— FIFA World Cup (@FIFAWorldCup) July 15, 2026
Summary
Golden boot and Golden ball in a single edition of FIFA Worldcup, messi will take it in 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய வரலாறு படைத்த மெஸ்ஸி!

மெஸ்ஸிக்காக நடத்தப்படுகிறதா உலகக் கோப்பை?: ஃபிபா மீது குவியும் குற்றச்சாட்டுகள்! | FIFA | Messi |

உலகக் கோப்பை: 5 போட்டிகளில் 4 ஆட்ட நாயகன் விருதுகள் வென்ற மெஸ்ஸி!








