கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடரில் அதிக கோல்கள் (10) அடித்து எம்பாபே தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருதில் முன்னிலை வகிக்கிறார்.
ஆர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி 8 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இறுதிப் போட்டியில் ஸ்பெயினும் விளையாடும் மெஸ்ஸி எம்பாபேவை முந்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரையிறுதி வரைக்கும் மெஸ்ஸி 8 - எம்பாபே இருவரும் 8 கோல்களுடன் சமநிலையில் இருந்தார்கள். ஆனால், அசிஸ்ட்டில் மெஸ்ஸி முன்னிலையில் இருந்தார். மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்துடன் பிரான்ஸ் 4-6 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் பிரான்ஸ் தோற்றாலும் எம்பாபே 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து அசத்தினார். இதனால், மெஸ்ஸியை விட அதிக கோல்களும் அசிஸ்ஸ்டில் சமனாகவும் இருக்கிறார்.
மெஸ்ஸி எம்பாபேவை முந்த வேண்டுமானால் 3 கோல்கள் அடிக்க வேண்டும். அல்லது 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்தாலும் அவரை முந்தி முதலிடத்துக்குச் செல்லாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
கடந்த உலகக் கோப்பையிலும் எம்பாபேதான் தங்கக் காலணி விருதை வென்றார். மெஸ்ஸி தங்கப் பந்து விருதை வென்றார். இந்த முறையும் தங்கப் பந்து விருது மெஸ்ஸிக்கு கிடைக்கும் நிலையில், தங்கக் காலணி விருதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தற்போது எம்பாபே 10 கோல்கள், 4 அசிஸ்ட்டுடன் முதலிடத்தில் இருக்க, மெஸ்ஸி 8 கோல்கள், 4 அசிஸ்ட்டுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆர்ஜென்டீனாவின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்கலோனி, “மெஸ்ஸி ஒரு வரலாறு. அவர் ஒரு லெஜ்ண்ட்” எனக் கூறியுள்ளார்.
This adidas Golden Boot race ð¤¯#FIFAWorldCup pic.twitter.com/EUadhOczY2
— FIFA World Cup (@FIFAWorldCup) July 19, 2026
Summary
Mbappe leads the race for the Golden Boot: Will Messi overtake him in the final?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










