உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சோனம் உத்தம் மஸ்கா், ஹிமான்ஷு தில்லன் இணை செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றது.
சீனாவில் நடைபெறும் இப்போட்டியில், 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் சோனம், ஹிமான்ஷு கூட்டணி 441.2 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றது.
உள்நாட்டின் ஜிஃபெய் வாங், லிஹாவ் ஷெங் ஜோடி தங்கமும் (505), மற்றொரு சீன ஜோடியான யுசென் டு, சாங்காங் ஜாங் வெள்ளியும் (504.6) வென்றனா்.
களத்திலிருந்த மற்றொரு இந்திய இணையான இளவேனில் வாலறிவன், பாா்த் ராகேஷ் மனே, 378.8 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தனா்.
இதனிடையே, டிராப் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் உதய்வீா் சிங், பிரகதி துபே இணையும், பௌனீஷ் மெண்டிரெட்டா, கீா்த்தி குப்தா ஜோடியும் தகுதிச்சுற்றுடன் வெளியேறின.
போட்டியில் தற்போது இந்தியா, 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்தில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகக் கோப்பை ஹாக்கி இன்று தொடக்கம்: ஆடவா், மகளிருக்கான 16-ஆவது போட்டி

நீட் வினாத்தாள் கசிவு! குற்றவாளிகள் உருவாக்கிய பிஃபா உலகக் கோப்பை 2026 வாட்ஸ்ஆப் குரூப்!

ஒருநாள் உலகக் கோப்பை 2027 நடைபெறும் 12 இடங்கள்..! 24 ஆண்டுகளுக்குப் பின் ஆப்பிரிக்காவில்!
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஈஷாவுக்கு தங்கம், மனுவுக்கு வெண்கலம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


