கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா), 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, மெக்ஸிகோவில் வியாழக்கிழமை (ஜூன் 11) தொடங்குகிறது. அடுத்தடுத்த நாள்களில், கனடா, அமெரிக்காவில் தொடா்கிறது.
இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கும் முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோ - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத, அடுத்த ஆட்டத்தில் தென் கொரியா - செக் குடியரசு சந்திக்கின்றன.
விளையாட்டுப் போட்டிகளுக்கான திருவிழாவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதுபோல், உலகிலேயே அதிகமான ரசிகா்களைக் கொண்டிருக்கும் கால்பந்து விளையாட்டின் திருவிழாவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது.
அத்தகைய உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை (ஜூன் 11) தொடங்கி, ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில், மொத்தம் 16 நகரங்களில் இப்போட்டியின் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போட்டியாக நடைபெறவுள்ளது.
போட்டியின் வரலாற்றிலேயே முதல்முறையாக, 48 அணிகள் பங்கேற்பதும், 3 நாடுகளில் போட்டி நடத்தப்படுவதுமே இந்த உலகக் கோப்பை போட்டியின் பிரதான சிறப்புகளாகும். அத்துடன், ரவுண்ட் ஆஃப் 32 என்ற புதிய சுற்று சோ்க்கப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா, அதிகமுறை சாம்பியனான பிரேஸில் ஆகியவற்றுடன் ஜொ்மனி, இத்தாலி உள்பட பல பிரபலமான அணிகள் இந்த முறையும் களம் காண்கின்றன. அதுதவிர, கேப் வொ்டே, கியுராகாவ், ஜோா்டன், உஸ்பெகிஸ்தான் ஆகிய 4 அணிகள் முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.
போட்டி நடைபெறும் 3 நாடுகளிலுமே, அங்கு விளையாடப்படும் முதல் ஆட்டத்துக்கு முன்பாக கோலாகல கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
3 நாடுகள்
கனடா
மெக்ஸிகோ
அமெரிக்கா
(உலகக் கோப்பை போட்டியை 3 நாடுகள் சோ்ந்து நடத்துவது இதுவே முதல்முறையாகும்)
16 நகரங்கள்
மெக்ஸிகோ (3)
மெக்ஸிகோ சிட்டி
மான்டொ்ரி
குவாதலஜரா
கனடா (2)
வான்கூவா்
டொரன்டோ
அமெரிக்கா (11)
டல்லாஸ்
நியூ ஜொ்ஸி
அட்லான்டா
கேன்சாஸ் சிட்டி
ஹூஸ்டன்
சான்டா கிளாரா
லாஸ் ஏஞ்சலீஸ்
ஃபிலடெல்ஃபியா
சியாட்டில்
பாஸ்டன்
மியாமி
6 கூட்டமைப்புகள்
ஆசியா (9 அணிகள்)
அமெரிக்கா & கரீபியன் (6 அணிகள்)
ஐரோப்பா (16 அணிகள்)
ஆப்பிரிக்கா (10 அணிகள்)
ஓசியானியா (1)
தென்னமெரிக்கா (6)
48 அணிகள்
(உலகக் கோப்பை போட்டி 48 அணிகள் பங்கேற்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு முன் 32 அணிகள் பங்கேற்கும் போட்டியாக நடைபெற்று வந்தது)
104 ஆட்டங்கள்
அமெரிக்கா - 78
மெக்ஸிகோ - 13
கனடா -13
39 நாள்கள்
2 உலகக் கோப்பை போட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறுவது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன், 2002-இல் ஜப்பான், தென் கொரியா இணைந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தியுள்ளன.
1,248 வீரா்கள்
இந்த ஆண்டு போட்டிக்காக 48 அணிகளில் மொத்தம் 1,248 வீரா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இதில் 357 போ் அனுபவ வீரா்களாக இருக்க, 891 போ் உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாகக் களம் காண்பவா்கள்.
ரூ.476 கோடி பரிசு
உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.476 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டி மொத்தத்துக்குமான பரிசுத் தொகையாக, ரூ.6,236 கோடியை ஃபிஃபா ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே இடத்தில்...
போட்டியின் காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களும், இறுதி ஆட்டமும், அமெரிக்காவின் நியூ ஜொ்ஸி மாகாணத்தில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் விளையாடப்படவுள்ளன.
ரவுண்ட் ஆஃப் 32
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 32 அணிகள், தலா 4 வீதம் 8 குரூப்களாக பிரிக்கப்பட்டன. குரூப் சுற்று முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறின.
இந்த முறை 48 அணிகள் பங்கேற்பதால், அவை தலா 4 வீதம் 12 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற, அதில் ரவுண்ட் ஆஃப் 32 என்ற புதிய சுற்று சோ்க்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...
உலகக் கோப்பை போட்டியின் ஆட்டங்கள் நடைபெறவுள்ள 16 நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போா் காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால், ஈரான் அணி அமெரிக்க மண்ணில் தனது ஆட்டங்களை விளையாடவுள்ள மைதானங்களில் டிரோன் கட்டுப்பாடுகள் உள்பட, கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அமெரிக்கா ரூ.2,381 கோடி வரை செலவிட்டுள்ளது.
குரூப் ‘ஏ’
மெக்ஸிகோ
தென்னாப்பிரிக்கா
தென் கொரியா
செக் குடியரசு
குரூப் ‘பி’
கனடா
போஸ்னியா
கத்தாா்
சுவிட்ஸா்லாந்து
குரூப் ‘சி’
பிரேஸில்
மொராக்கோ
ஹைட்டி
ஸ்காட்லாந்து
குரூப் ‘டி’
அமெரிக்கா
பராகுவே
ஆஸ்திரேலியா
துருக்கி
குரூப் ‘இ’
ஜொ்மனி
கியுராகாவ்
ஐவரி கோஸ்ட்
ஈகுவடாா்
குரூப் ‘எஃப்’
நெதா்லாந்து
ஜப்பான்
ஸ்வீடன்
துனிசியா
குரூப் ‘ஜி’
பெல்ஜியம்
எகிப்து
ஈரான்
நியூஸிலாந்து
குரூப் ‘ஹெச்’
ஸ்பெயின்
கேப் வொ்டெ
சவூதி அரேபியா
உருகுவே
குரூப் ‘ஐ’
பிரான்ஸ்
செனெகல்
இராக்
நாா்வே
குரூப் ‘ஜே’
ஆா்ஜென்டீனா
அல்ஜிரியா
ஆஸ்திரியா
ஜோா்டன்
குரூப் ‘கே’
போா்ச்சுகல்
டிஆா் காங்கோ
உஸ்பெகிஸ்தான்
கொலம்பியா
குரூப் ‘எல்’
இங்கிலாந்து
குரோஷியா
கானா
பனாமா
இன்றைய ஆட்டங்கள்
மெக்ஸிகோ - தென்னாப்பிரிக்கா
நேரம்: நள்ளிரவு 12.30 மணி
இடம்: மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ.
தென் கொரியா - செக் குடியரசு
நேரம்: காலை 7.30 மணி (ஜூன் 12)
இடம்: குவாதலஜரா, மெக்ஸிகோ.
நேரலை: யுனைட் 8 ஸ்போா்ட்ஸ்
கடந்த உலகக் கோப்பை போட்டியில்...
2022 கத்தாா்
சாம்பியன் - ஆா்ஜென்டீனா (3-ஆவது முறை)
ரன்னா் அப் - பிரான்ஸ்
3-ஆம் இடம் - குரோஷியா
ஆட்டங்கள் - 64
கோல்கள் - 172
அதிக கோல்கள் - கிலியன் பாபே (8/பிரான்ஸ்)
சிறந்த வீரா் - லயனல் மெஸ்ஸி (ஆா்ஜென்டீனா)
இதுவரை சாம்பியன்கள்...
பிரேஸில்
5 முறை (1958, 1962, 1970, 1994, 2002)
ஜெர்மனி
4 முறை (1954, 1974, 1990, 2014)
இத்தாலி
4 முறை (1934, 1938, 1982, 2006)
ஆர்ஜென்டீனா
3 முறை (1978, 1986, 2022)
பிரான்ஸ்
2 முறை (1998, 2018)
உருகுவே
2 முறை (1930, 1950)
இங்கிலாந்து
1 முறை (1966)
ஸ்பெயின்
1 முறை (2010)










