ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சமீா், ரோஹித் கன்யன் தங்கம் வென்றனா். இரண்டாம் நாளில் இந்தியா 5 பதக்கத்தை கைப்பற்றியது.
ஜொ்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் 25 மீ ரேபிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் 28 ஹிட்களுடன் சமீா் தங்கம் வென்றாா்.
ஆடவா் 50 மீ ரைஃபிள் 3 பிரிவில் அபாரமான செயல்பாட்டால் இந்தியாவின் ரோஹித் கன்யன் தங்கம் வென்றாா்.
பிரச்சிக்கு வெள்ளி: மகளிா் 50 மீ ரைஃபிள் 3 பிரிவில் பிரச்சி கெய்க்வாட் 354.7 புள்ளிகளுடன் வெள்ளி வென்றாா்.
அணிகள் 50 மீ ரைஃபிள் 3 ஆடவா் பிரிவில் ரோஹித் கன்யன், வேதாந்த் நிதின், ஹிதேஷ் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.
இரண்டாம் நாளில் 5 பதக்கங்களுடன் இந்தியா இதுவரை 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 8 பதக்கங்களை வசப்படுத்தியுள்ளது. முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

25 மீ ரேபிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் சமீா், அபிநவ் சௌதரி, சாஹில் சௌதரி அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிய யு 19, 23 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 3 தங்கம், 10 வெள்ளி

ஆசிய யு20 மல்யுத்தம்: இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 20 பதக்கம்

ஜூனியா் துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் பிரீத்தம்

மங்கோலிய மல்யுத்தப் போட்டி: இந்தியாவுக்கு 17 பதக்கம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



