வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

அரையிறுதியில் தேவிகா, ஸ்ரீகாந்த், ரௌனக்

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தேவிகா, ஸ்ரீ காந்த், ரௌனக் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதிபெற்றனா்.

News image

ரௌனக் ~தேவிகா ~

Updated On :28 ஜூன் 2026, 12:54 am IST

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தேவிகா, ஸ்ரீ காந்த், ரௌனக் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதிபெற்றனா்.

அமெரிக்காவின் ஃபுல்லா்டன் நகரில் நடைபெறும் பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் சூப்பா் 300 போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் தாய்லாந்து மாஸ்டா்ஸ் வின்னா் தேவிகா சிஹாக் 22-20, 21-19 என்ற கேம் கணக்கில் மூன்றாம் நிலை வீராங்கனை ஜப்பானின் ரிகோ குன்ஜியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

ஆடவா் பிரிவில் முன்னாள் உலக நம்பா் 1 வீரா் கே. ஸ்ரீ காந்த் 21-19, 12-21, 21-8 என்ற கேம் கணக்கில் சீன தைபேயின் லியோ ஜுவோயை வீழ்த்தினாா்.

மற்றொரு ஆட்டத்தில் ரௌனக் சௌஹான் 23-21, 21-11 என்ற கேம் கணக்கில் இஸ்ரேலின் மிஷாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். மகளிா் காலிறுதியில் ரக்ஷிதா வீழ்ந்தாா்.

Story image

அரையிறுதியில் கிறிஸ்டோபென்ஸனுடன் தேவிகாவும், ஆடவரில் ஸ்ரீ காந்த் ஜப்பானின் யுடாயுடனும், ரௌனக் சீன தைபேயின் சு லியுடனும் மோதுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.