பாரீஸ் ஜெயன்ட் ஜெர்மன் (பிஎஸ்ஜி) கால்பந்து அணியின் ஃபார்வேர்ட் வீரர் உஸ்மான் டெம்பெலெ லீக் 1 தொடரின் இந்த சீசனுக்கான சிறந்த வீரர் என்ற விருதை வென்றார். இந்த விருதை இரண்டாவது முறையாகப் பெற்று அசத்தியுள்ளார்.
பிரான்சில் நடைபெறும் லீக் 1 கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி அணி அதிகமுறை (13) வென்றுள்ளது. நடப்பு சீசனில் பிஎஸ்ஜி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உஸ்மான் டெம்பெலெ (28 வயது) 2023 முதல் பிஎஸ்ஜி அணியில் விளையாடி வருகிறார். முன்னதாக, இவர் பார்சிலோனா அணியில் விளையாடியிருக்கிறார்.
கடந்த சீசனில் பேலந்தோர் விருதையும் வென்று அசத்தினார். லீக் 1 தொடரிலும் கடந்த சீசனில் சிறந்த வீரராகத் தேர்வானார். பிஎஸ்ஜி வீரர்கள் 10-ஆவது முறையாகத் தொடர்ச்சியாகத் தேர்வாகியுள்ளார்கள்.
முன்னதாக கிளியன் எம்பாபே ஐந்தாவது முறையாக வென்றிருந்தார். கடந்த சீசனில் 21 கோல்கள் அடித்த உஸ்மான் டெம்பெலெ இந்த சீசனில் காயம் காரணமாக பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. 9 போட்டிகளில் 10 கோல்கள் அடித்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் லீக்கில் உஸ்மான் டெம்பெலெ சிறப்பாக விளையாடி வருகிறார். அரையிறுதியில் பயர்ன் மியூனிக்கை 6-5 என வீழ்த்தி பிஎஸ்ஜி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
லீக் 1 தொடரில் 6 புள்ளிகள் முன்னிலையில் இருக்கும் பிஎஸ்ஜி குறைந்தபட்சம் ஒரு டிரா செய்தாலே கோப்பை உறுதியாகிவிடும். லென்ஸ் அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
Best Player of the Season.
— Ligue 1 English (@Ligue1_ENG) May 11, 2026
Ousmane Dembélé. âï¸ pic.twitter.com/UQ90ImORFB
Summary
Paris Saint-Germain forward Ousmane Dembele voted Ligue 1's best player for a 2nd straight season.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரவேற்பைப் பெறும் அன்பே டயானா திரைப்படம்!

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!

பெரம்பூர் மக்கள் காலத்திற்கும் நினைக்கும் திரைப்படம்... அன்பே டயானா குறித்து இயக்குநர்!

அன்பே டயானா திரைப்படத்தின் டிரைலர்!
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech



