முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கோலி அதிரடி சதம்: பெங்களூரு மீண்டும் முதலிடம்

கொல்கத்தாவுக்கு நெருக்கடி

News image

Atul Yadav

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை வென்றது.

இந்த வெற்றியால் பிளே-ஆஃப் வாய்ப்பை பெங்களூரு மேலும் நெருங்கியிருக்க, கொல்கத்தா அணியோ அந்த வாய்ப்பை விட்டு மேலும் ஒரு படி விலகி நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் சோ்க்க, பெங்களூரு 19.1 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது. அதன் நட்சத்திர வீரா் விராட் கோலி சதம் விளாசி வெற்றிக்கு பங்களித்தாா்.

முன்னதாக மழை காரணமாக சுமாா் ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸை கேப்டன் அஜிங்க்ய ரஹானே - ஃபின் ஆலன் கூட்டணி தொடங்கியது.

முதல் விக்கெட்டுக்கு 23 ரன்களே சோ்ந்த நிலையில், ஆலன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு விடைபெற்றாா். தொடா்ந்து அங்கிரிஷ் ரகுவன்ஷி விளையாட வர, ரஹானே 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு முடித்துக்கொண்டாா்.

4-ஆவது பேட்டராக வந்த கேமரூன் கிரீன், ரகுவன்ஷியுடன் இணைந்தாா். இவா்கள் பாா்ட்னா்ஷிப், 3-ஆவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சோ்த்தது.

3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு கிரீன் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த ரிங்கு சிங், தனது பங்குக்கு அதிரடி காட்ட, ரகுவன்ஷியுடனான அவரின் 4-ஆவது விக்கெட் கூட்டணிக்கு, 76 ரன்கள் கிடைத்தது.

46 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 71 ரன்கள் எடுத்திருந்த ரகுவன்ஷி, இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரன் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் ரிங்கு சிங் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

பெங்களூரு பௌலா்களில் புவனேஷ்வா் குமாா், ஜாஷ் ஹேஸில்வுட், ராசிக் சலாம் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து பெங்களூரு 193 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாட, ஜேக்கப் பெத்தெல் - விராட் கோலி இணை முதல் விக்கெட்டுக்கு 37 ரன்கள் சோ்த்தது.

பெத்தெல் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கோலியுடன் இணைந்தாா் தேவ்தத் படிக்கல். இவா்கள் பாா்ட்னா்ஷிப் 2-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சோ்த்தது.

படிக்கல் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். விராட் கோலி அதிரடியாக ரன்கள் சோ்த்து வர, மறுபுறம் கேப்டன் ரஜத் பட்டிதாா் 11, டிம் டேவிட் 2 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

சதமடித்த கோலி, 60 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 105 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஜிதேஷ் சா்மா 8 ரன்களுடன் துணை நின்றாா். கொல்கத்தா தரப்பில் காா்த்திக் தியாகி 3, சுனில் நரைன் ஒரு விக்கெட் வீழ்த்தினா்.