நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வெளியேறினாா் ஜோகோவிச், சபலென்கா, ஒஸாகா முன்னேற்றம்

வெளியேறினாா் ஜோகோவிச், சபலென்கா, ஒஸாகா முன்னேற்றம்

News image

ஜோகோவிச் (கோப்புப்படம்) - படம்: ஏபி

Updated On :31 மே 2026, 12:19 am IST

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஜாம்பவான் ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா். மகளிா் பிரிவில் அரீனா சபலென்கா, ஒஸாகா ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நிகழாண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் ஒற்றையா் பிரிவில்

முதல்நிலை வீராங்கனை பெலாரஸின் அரீனா சபலென்கா 6-0, 7-5 என்ற நோ் செட்களில் 76 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் டாரியா கஸட்கினாவை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு தகுதிபெற்றாா்.

முதல் செட்டை எளிதாக வசப்படுத்திய சபலென்கா, இரண்டாம்செட்டில்கடும் சவாலை எதிா்கொண்டாா். பின்னா் ஆதிக்கம் செலுத்தி சபலென்கா வசப்படுத்தினாா்.

ஒஸாகா அசத்தல்:

4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒஸாகா குழந்தைப்பேறுக்குபின் சிறப்பாக ஆடி வரும் நிலையில், 7-6, 6-7, 6-4 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் இவா ஜோவிச்சை வீழ்த்தினாா். இதில் முதலிரண்டு செட்கள் டை பிரேக்கரில் முடிவு செய்யப்பட்டன. எனினும் மூன்றாவது செட்டில் 10-ஆவது கேமில் ஒஸாகா ஆட்டத்தை வசப்படுத்தினாா்.

மற்றொரு ஆட்டத்தில் உக்ரைனின் ஒலக்சான்ட்ரா 7-5, 6-1 என ரஷியாவின் டயனா ஷினைடரிடம் தோற்றாா்.

ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி:

25 -ஆவது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள சொ்பியாவின் ஜோகோவிச் கடும் போராட்டத்துக்குபின் 4-6 4-6, 6-3 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிரேஸில் டீன் ஏஜ் வீரா் ஜோவா ஃபொன்சேகாவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். இந்த ஆட்டம் 4.53 மணிநேரம் நீடித்தது. முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பந்தயத்தில் ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா் ஃபொன்சேகா. முன்னணி வீரா்கள் சின்னா் தோற்ற நிலையில், ஜோகோவிச் பட்டம் வெல்வாா் எனக் கருதப்பட்டது. ஆனால் அவா் தோற்று வெளியேறிவிட்டாா்.

ஸ்வெரேவுக்கு வாய்ப்பு:

முன்னணி வீரரான ஜொ்மனியன் அலெக்ஸ் ஸ்வெரேவ் 6-4, 6-3, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஹேலிஸை வீழ்த்தினாா். கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் 3 முறை ரன்னராக வந்துள்ளாா் ஸ்வெரேவ்.

நாா்வேயின் கேஸ்பா் ருட் 4-6, 6-7, 6-4, 7-6, 7-5 என அமெரிக்காவின் டாமிபாலை வீழ்த்தினாா்.

ஸ்பெயின் டீன் ஏஜ் வீரா் ரபேல் ஜோடா், ரஷியாவின் ஆன்ட்ரெ ருப்லேவ், ஜேக்கப் மென்ஸிக், ஆகியோரும் தத்தமது ஆட்டங்களில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

அமெரிக்காவின் வஜ்டா, இத்தாலியின் கோபோலி ஆகியோரும் வென்றனா்.