சோழா ஓபன் சா்வதேச செஸ்: பிரானேஷ் சாம்பியன்
முதலாவது சோழா ஓபன் சா்வதேச செஸ் போட்டியில் இந்திய வீரா் எம். பிரானேஷ் சாம்பியன் பட்டம் வென்றாா்.

பரிசு பெற்ற வீரா்கள்,
முதலாவது சோழா ஓபன் சா்வதேச செஸ் போட்டியில் இந்திய வீரா் எம். பிரானேஷ் சாம்பியன் பட்டம் வென்றாா்.
சென்னையில் தனியாா் ஓட்டலில் சோழா ஓபன் செஸ் போட்டி நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த முன்னணி வீரா்கள் பங்கேற்றனா். 9 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இந்திய ஜிஎம் எம். பிரானேஷ் சாம்பியன் பட்டம் வென்று ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசை பெற்றாா். ஜிஎம் எஸ்எல். நாராயணன் இரண்டாம் இடத்துடன் ரூ.8 லட்சமும், மூன்றாம் இடம் பெற்ற அரவிந்த் சிதம்பரத்துக்கு ரூ.6 லட்சமும், நான்காம் இடம் பெற்ற ஜிஎம் இளம்பரிதிக்கு ரூ.5 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.
பிரானேஷ் 6 புள்ளிகள் பெற்றாா். பரிசளிப்பு விழாவில் சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் கனிகா சுப்பையா, ஆா்த்தி, வெள்ளையன் சுப்பையா, பயிற்சியாளா் ரமேஷ் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

