இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

ஆசிய விளையாட்டு: பதக்கப் பட்டியலில் சீனா ஆதிக்கம்! 6-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டிகள் பதக்கப் பட்டியல் பற்றி...

kabbadi team

இந்திய கபடி அணி - ANI

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 12 தங்கங்களுடன் இந்திய அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைய இன்னும் 2 நாள்களே மீதமிருக்கும் நிலையில், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

அக். 2 காலை 11.30 மணி நிலவரப்படி, 155 தங்கம், 71 வெள்ளி, 64 வெண்கலம் உள்பட 290 பதங்கங்களுடன் சீனா முதலிடத்தில் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப். 30 ஆம் தேதி 4 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணி, நேற்று ஒரு வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வென்றது.

இந்த நிலையில், இன்று காலை மகளிர் வில்வித்தை அணி மற்றும் மகளிர் மல்யுத்தம் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இதன்மூலம், பஹ்ரைன், ஈரானை பின்னுக்குத் தள்ளி பதக்கப் பட்டியலில் 6-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. வெள்ளி 24, வெண்கலம் 34 உள்பட மொத்தம் 70 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

ஜப்பான் (63 தங்கம்), தென்கொரியா (31 தங்கம்), உஸ்பெகிஸ்தான் (17 தங்கம்) , தாய்லாந்து (14 தங்கம்) ஆகிய நாடுகள் பதக்கப் பட்டியலில் முறையே இரண்டு முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

இன்னும் இரண்டு நாள்கள் மீதமிருக்கும் நிலையில், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்தைவிட அதிக தங்கப் பதக்கங்களை இந்தியா வெல்லும் பட்சத்தில் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்துடன் தொடரை நிறைவு செய்ய வாய்ப்புள்ளது.

Summary

Asian Games: China dominates the medal tally - India moves up to 6th place

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.