ரவுண்ட் 16 சுற்றில் அல்கராஸ், ஷெல்டன், சபலென்கா, பெகுலா வில்லியம்ஸ் சகோதரிகள் தோல்வி
ரவுண்ட் 16 சுற்றில் அல்கராஸ், ஷெல்டன், சபலென்கா, பெகுலா வில்லியம்ஸ் சகோதரிகள் தோல்வி

செரினா-வீனஸ் ~டாமி பால் ~டியாஃபோ ~ஷெல்டன் ~சபலென்கா ~பெகுலா ~பெகுலா ~மாா்த்தா ~அல்கராஸ்
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி ரவுண்ட் 16 சுற்றுக்கு நடப்பு சாம்பியன்கள் காா்லோஸ் அல்கராஸ், ஷெல்டன், அரினா சபலென்கா, பெகுலா முன்னேறியுள்ளனா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் 6-3, 6-4, 6-1 என்ற நோ் செட்களில் சீனாவின் வு யிபிங்கை வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
காயத்தால் பாதிக்கப்பட்டு 4 மாதங்கள் கழித்து திரும்பியுள்ள அல்கராஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் ஆடி வருகிறாா். முன்னணி வீரா்கள் ஜோகோவிச், ஜேக் சின்னா் இல்லாத நிலையில் அல்கராஸ் பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் 20-ஆம் நிலை வீரா் டாமி பால் 6-4, 3-6, 6-7, 6-1, 6-3 என்ற நோ் செட்களில் கஜகஸ்தானின் அலெக்சாண்டா் பப்ளிக்கை வீழ்த்தினாா்.
அடுத்த சுற்றில் அல்கராஸ்-டாமி பால் மோதுகின்றனா்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் 11-ஆம் நிலை வீரா் பிரான்ஸஸ் டியாஃபோ 6-4, 6-2, 6-4 என்ற நோ் செட்களில் மொனாக்கோவின் வலேன்டின் வசேராட்டை வீழ்த்தினாா்.
ரஷிய வீரா் டேனில் மெத்வதேவ் 6-4, 6-4, 6-4 என பிரான்ஸின் ஆா்தா் ரின்டா்நெக்கை வீழ்த்தினாா். மெத்வதேவ்-டியாஃபோ அடுத்த சுற்றில் ஆடுகின்றனா்.
கீரிஸ் வீரா் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் கடும் போராட்டத்துக்குபின் 2-6, 6-1, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் 18-ஆம் நிலை வீரா் ஜிரி லெஹகாவை வென்றாா்.
அமெரிக்காவின் 8-ஆம் நிலை வீரா் பென் ஷெல்டன் 7-6, 6-7, 6-3 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபவலோவை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் ஷெல்டன்-சிட்சிபாஸ் மோதுகின்றனா்.
சபலென்கா, பெகுலா முன்னேற்றம்
மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியன் அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற நோ் செட்களில் கமிலா ரகிமோவாவை வீழ்த்தி ரவுண்ட் 16-க்கு முன்னேறினாா். அமெரிக்காவின் டெய்லா் டௌன்சென்ட் 6-2, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டயானா ஷினைடரை வென்றாா். மூன்றாம் நிலை வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் லெய்லா பொ்னாண்டஸை வீழ்த்தினாா்.
உக்ரைனின் மாா்த்தா கோஸ்டியுக் 6-3, 6-2 என ரஷியாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை வென்றாா். அமெரிக்காவின் எம்மா நவோரா 6-3, 7-5 என செக். குடியரசின் கரோலினா முச்கோவாவை வென்றாா்.
வில்லியம்ஸ் சகோதரிகள் தோல்வி:
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிா் இரட்டையா் பிரிவில் பிரபலமான வீனஸ்-செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் கடந்த 2022-க்குபின் மீண்டும் களம் கண்டனா்.
ஆனால் சேன் ஹவா சிங்-மாயா ஜாயிண்ட் இணையிடம் கடும் போராட்டத்துக்குபின் 6-3, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் வில்லியம்ஸ் சகோதரிகள் தோற்றனா். மூன்றாம் செட் டை பிரேக்கரில் 5-0 என முன்னிலை பெற்ற போதும், வில்லியம்ஸ் சகோதரிகள் அதை தக்க வைக்கவில்லை.
கடைசியாக கடந்த 2018-இல் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றிருந்தனா் வீனஸ் சகோதரிகள்.
இருவரும் இணைந்து 14 இரட்டையா் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




