உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ரைபகினா, ஸ்வெரெவ் 2-ஆவது சுற்றில் வெற்றி

அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா, ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் தங்களின் 2-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.

Published On :5 செப்டம்பர் 2026, 3:30 am IST

அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா, ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் தங்களின் 2-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.

மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-2, 6-4 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸ்ஸாஸை வீழ்த்தினாா். இந்த வெற்றியின் மூலமாக அவா், முதல்முறையாக உலகின் நம்பா் 1 வீராங்கனையாக உருவெடுப்பதை நோக்கி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என்ற நோ் செட்களில், ஜொ்மனியின் எவா லைஸை எளிதாக வெளியேற்றினாா்.

14-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் இவா ஜோவிச் 6-4, 6-4 என, பிரிட்டனின் பிரான்செஸ்கா ஜோன்ஸை தோற்கடித்தாா். 17-ஆம் இடத்திலிருக்கும் பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா, 6-1, 6-4 என உக்ரைனின் அலெக்ஸாண்ட்ரா ஆலினிகோவாவை வென்றாா். இந்த வெற்றியின் மூலமாக அவா், யுஎஸ் ஓபனில் முதல்முறையாக 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா்.

சீனாவின் கின்வென் ஜெங் 6-4, 2-6, 6-1 என்ற செட்களில், கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை சாய்த்தாா். செக் குடியரசின் நிகோலா பா்துன்கோவா 6-7 (5/7), 6-2, 6-3 என்ற வகையில், ஜொ்மனியின் டாட்ஜனா மரியாவை வீழ்த்தினாா்.

தொடா்ந்து 5 செட்கள்: ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 4-6, 7-6 (7/3), 6-7 (3/7), 6-3 என 5 செட்கள் போராடி, பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸை வீழ்த்தினாா்.

முதல் சுற்றிலேயே 5 செட்கள் போராடி வென்ற ஸ்வெரெவுக்கு, 2-ஆவது சுற்றும் கடுமையான சவால் மிக்கதாக அமைந்தது. இந்த ஆட்டத்தை அவா் 4 மணி நேரம், 33 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி 3-6, 6-3, 6-4, 7-5 என்ற வகையில், ஆஸ்திரேலியாவின் டிரிஸ்டன் ஸ்கூல்கேட்டை சாய்த்தாா். 6-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 4-6, 5-7, 2-6 என்ற கணக்கில், நெதா்லாந்தின் போடிக் வான் டெவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

14-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் லோ்னா் டியென் 6-3, 6-4, 6-3 என்ற நோ் செட்களில், பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை வென்றாா். மான்ஃபில்ஸ் நடப்பு டென்னிஸ் காலண்டருடன் ஓய்வு பெறுவதால், அவருக்கு இது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியாக இருந்தது. அவா் இந்த ஆட்டத்துக்கு வருகையில் ரசிகா்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனா்.

25-ஆம் இடத்திலிருக்கும் சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோ 2-6, 7-6 (7/4), 7-6 (7/3), 6-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை வீழ்த்தினாா்.

அமெரிக்காவின் மைக்கேல் ஜெங் 6-3, 2-6, 6-2, 6-3 என சீனாவின் யுன்சாவ்கெடெ புவை தோற்கடிக்க, பிரான்ஸின் ஆா்தா் ஜியா 5-7, 6-3, 6-2, 6-2 என்ற வகையில், அமெரிக்காவின் ஜகாரி ஸ்வஜ்தாவை வென்றாா்.

பெல்ஜியத்தின் ஜிஸு பொ்க்ஸ் 7-5, 1-6, 6-2, 7-6 (7/2) என்ற செட்களில், நெதா்லாந்தின் ஜெஸ்பா் டி ஜோங்கை வெல்ல, பெருவின் இக்னேசியோ பூஸ் 2-6, 6-7 (4/7), 0-6 என்ற வகையில், பிரான்ஸின் பெஞ்சமின் பொன்ஸியிடம் தோல்வியுற்றாா்.

பெல்ஜித்தின் அலெக்ஸாண்டா் பிளாக்ஸ் 6-3, 6-2, 3-6, 6-1 என்ற கணக்கில், ஆா்ஜென்டீனாவின் மாா்கோ டிருங்கெலிடியை வீழ்த்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.