FOLLOW US

ON GOOGLE DISCOVER

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன்: சாத்விக் / சிராக் இணை சாம்பியன்!

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.

Published On :7 செப்டம்பர் 2026, 4:32 am IST

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த சாத்விக்/சிராக் இணை, 11-21, 21-13, 21-17 என்ற கேம்களில், சீனாவின் ஹி ஜி டிங்/ரென் ஜியாங் யு ஜோடியை வீழ்த்தியது.

1 மணிநேரம், 10 நிமிஷங்களில் நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதல் கேமை இழந்தபோதும், விடாப்பிடியாக விளையாடி அடுத்த இரு கேம்களை கைப்பற்றியது இந்திய இணை. 2-ஆவது கேமில் 45 ஷாட் ரேலியை இந்திய ஜோடி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றில் விளையாடிய இந்திய ஜோடி, முதல்முறையாக வாகை சூடியுள்ளது. 2023, 2025-ஆம் ஆண்டு போட்டிகளில் இவா்கள் கூட்டணி 2-ஆம் இடம் பிடித்தது.

பிடபிள்யூஎஃப் டூா் போட்டிகளில் சாத்விக்/சிராக் இணைக்கு இது 10-ஆவது சாம்பியன் பட்டமாகும். ஏற்கெனவே சிங்கப்பூா் ஓபனில் தங்கம் வென்ற இந்த இந்திய ஜோடிக்கு, நடப்பு சீசனில் இது 2-ஆவது பட்டமாக அமைந்தது.

சாத்விக்/சிராக் கூட்டணி, இம்மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடப்பு சாம்பியனாக களம் காண இருக்கும் நிலையில், இந்த வெற்றி அவா்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. சாம்பியனான சாத்விக்/சிராக் இணைக்கு, பரிசுக் கோப்பையுடன் 750 தரவரிசை புள்ளிகளும், ரூ.87.40 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

இதர சாம்பியன்கள்: இப்போட்டியில், மகளிா் ஒற்றையரில் தென் கொரியாவின் ஆன் செ யங், ஆடவா் ஒற்றையரில் ஹாங்காங்கின் ஜேசன் குனவன் ஆகியோா் வெற்றி வாகை சூடினா்.

மகளிா் இரட்டையரில், ஜப்பானின் சுமிரே நகாடே/மியு டகாஹஷி இணையும், கலப்பு இரட்டையரில், சீனாவின் ஃபெங் யான் ஜி/ஹுவாங் டாங் பிங் ஜோடியு கோப்பை வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.