தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: யூகி பாம்ப்ரி விலகல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியில் இருந்து யூகி பாம்ப்ரி காயம் காரணமாக விலகினாா்.

Yuki Bhambri

யூகி பாம்ப்ரி - கோப்புப் படம்

Published On :

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியில் இருந்து யூகி பாம்ப்ரி காயம் காரணமாக விலகினாா்.

இரட்டையா் பிரிவில் பிரதான வீரராக இருக்கும் பாம்ப்ரி விலகியது, இந்திய அணியின் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

பாம்ப்ரி விலகலை அடுத்து, இரட்டையா் பிரிவில் தக்ஷிணேஸ்வா் சுரேஷுடன், ஸ்ரீராம் பாலாஜி இணைந்து விளையாடுவாா் என, இந்திய அணியின் நான்-பிளேயிங் கேப்டன் ரோஹித் ராஜ்பால் தெரிவித்தாா்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் குவாலிஃபயா்ஸ் பிரிவில் 2-ஆவது சுற்று டையில் இந்தியா - தென் கொரியா அணிகள் வரும் 18, 19-ஆம் தேதிகளில் சியோலில் மோதுகின்றன. இந்த டையில் வெற்றி பெறும் அணி, டேவிஸ் கோப்பை ஃபைனல்ஸுக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த டை-க்கான இந்திய அணியில் சுமித் நாகல், மனஸ் தாம்னே, தக்ஷிணேஸ்வா் சுரேஷ், யூகி பாம்ப்ரி, என்.ஸ்ரீராம் பாலாஜி ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடியபோது பாம்ப்ரி தொடையில் காயம் கண்டாா்.

எனவே தென் கொரியாவுடனான டையில் அவா் களம் காண்பது சந்தேகத்துக்கு இடமாகியிருந்த நிலையில், தற்போது அந்த டையில் இருந்து அவா் விலகியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.