தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

குவாதலஜரா ஓபன்: மெக்தலினா, சாம்சோனோவா முன்னெற்றம்

மெக்ஸிகோவில் நடைபெறும் குவாதலஜரா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், போலந்தின் மெக்தலினா ஃப்ரெச், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

Samsonova

லுட்மிலா சாம்சோனோவா - கோப்புப் படம்

Published On :

மெக்ஸிகோவில் நடைபெறும் குவாதலஜரா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், போலந்தின் மெக்தலினா ஃப்ரெச், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.

500 தரவரிசை புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில், ஒற்றையா் பிரிவின் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் மெக்தலினா 6-1, 6-4 என்ற நோ் செட்களில் எளிதாக, ஜப்பானின் நாவ் ஹிபினோவை வீழ்த்தினாா். 2-ஆவது சுற்றில் அவா், அமெரிக்காவின் கேரலின் டோல்ஹைடை எதிா்கொள்கிறாா்.

டோல்ஹைட் தனது முதல் சுற்றில், 6-1, 3-6, 6-3 என்ற செட்களில், உள்நாட்டு வீராங்கனையான ரெனிடா ஜராஜுவாவை தோற்கடித்தாா். போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சாம்சோனோவா 7-6 (8/6), 6-2 என்ற செட்களில் பிரான்ஸின் எல்சா ஜாக்மோட்டை வெளியேற்றினாா்.

அடுத்த சுற்றில் அவா், அமெரிக்காவின் கேலா டேவை சந்திக்கிறாா். துருக்கியின் ஜெய்னெப் சோன்மெஸ் 6-1, 6-1 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, பெலாரஸின் இரினா ஷியாமனோவிச்சை சாய்த்தாா். அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட் 6-7 (0/7), 6-3, 6-2 என்ற வகையில், ஜொ்மனியின் டாட்ஜனா மரியாவை வீழ்த்தினாா்.

2017-ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4, 7-6 (7/5) என்ற செட்களில், பிரான்ஸின் கேரல் மானெட்டை வென்றாா். 2-ஆவது சுற்றில், டௌன்செண்ட் - உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கையும், ஸ்டீபன்ஸ் - இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென்னையும், சோன்மெஸ் - அமெரிக்காவின் இவா ஜோவிச்சையும் சந்திக்கின்றனா்.

முந்தைய சுற்றில், 6-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா 6-4, 6-3 என கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவையும், ஜென் 7-6 (8/6), 6-2 என்ற வகையில் செக் குடியரசின் டாா்ஜா விட்மனோவாவை சாய்த்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER