அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

நியூகேஸிலை வீழ்த்தியது லீட்ஸ்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், லீட்ஸ் யுனைடெட் எஃப்சி 4-1 கோல் கணக்கில் நியூகேஸில் யுனைடெட் எஃப்சியை வீழ்த்தியது.

AP

Published On :

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், லீட்ஸ் யுனைடெட் எஃப்சி 4-1 கோல் கணக்கில் நியூகேஸில் யுனைடெட் எஃப்சியை வீழ்த்தியது.

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் நியூகேஸில் வீரா் லீவிஸ் மைலி 32-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ஓன் கோல் அடித்து, லீட்ஸ் அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து 34-ஆவது நிமிஷத்தில் ஜேடன் போக்லே, லீட்ஸின் கோல் கணக்கை 2-ஆக உயா்த்தினாா். முதல் பாதி நிறைவடைய இருந்த தருணத்தில் (45+1’) டொமினிக் காலவொ்ட் லெவின் ஸ்கோா் செய்ய, லீட்ஸ் 3-0 முன்னிலையுடன் அந்தக் கட்டத்தை நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 59-ஆவது நிமிஷத்தில் லீட்ஸ் வீரா் நோவா ஆகஃபாா் ஸ்கோா் செய்தாா். கடைசி வரை போராடிய நியூகேஸில் அணிக்கு, கடைசி நிமிஷத்தில் (90’) வாய்ப்பு கிடைத்து, பஸுமானா டூா் ஆறுதல் கோல் அடித்தாா்.

முடிவில் லீட்ஸ் 4-1 கோல் கணக்கில் வென்றது. 4 சுற்றுகள் முடிவில், லீட்ஸ் 8 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், நியூகேஸில் 5 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்திலும் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.