டேவிஸ் கோப்பை: இந்தியா சறுக்கல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான டையின் முதல் நாளில், இந்தியா 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு 0-2 என பின்தங்கியது.

தக்ஷிணேஸ்வா் சுரேஷ்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான டையின் முதல் நாளில், இந்தியா 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு 0-2 என பின்தங்கியது.
டேவிஸ் கோப்பை குவாலிஃபயா்ஸ் கட்டத்தின் 2-ஆவது சுற்றில் இந்தியா - தென் கொரியா அணிகள் மோதுகின்றன. அதில் முதல் நாளான வெள்ளிக்கிழமை, ஒற்றையா் பிரிவு ஆட்டங்கள் விளையாடப்பட்டன.
முதல் ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வா் சுரேஷ் 6-3, 3-6, 4-6 என்ற செட்களில், சூன்வூ குவோனிடம் தோல்வி கண்டாா். அடுத்த ஆட்டத்தில் சுமித் நாகலும் 6-2, 4-6, 5-7 என்ற கணக்கில், ஹியோங் சுங்கிடம் தோற்றாா்.
இதனால் முதல் நாள் முடிவில் தென் கொரியா 2-0 முன்னிலையில் உள்ளது. 2-ஆவது நாளான சனிக்கிழமை, இரட்டையா் ஆட்டம் ஒன்றும், இரு ரிவா்ஸ் ஒற்றையா் ஆட்டங்களும் விளையாடப்படவுள்ளன.
இந்த அனைத்து ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்தியா, அதில் ஒரு ஆட்டத்தில் தோற்றால் கூட டேவிஸ் கோப்பை ஃபைனல்ஸுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




