வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

9 கோல்கள் போட்டு சாதனை படைத்த தீபிகா... ஹாக்கியில் தாய்லாந்தை பந்தாடிய இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கியில் தாய்லாந்தை 20-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளதைப் பற்றி...

கோல் அடிக்கும் முனைப்பில் இந்திய வீராங்கனை. - @TheHockeyIndia

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கியில் தாய்லாந்தை 20-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

மகளிருக்கான ஹாக்கி போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் புதன்கிழமை மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியில் தீபிகா ஷெராவத், 2-ஆவது நிமிடத்தில் முதல் கோலை போட்டார்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள். - @TheHockeyIndia

அதனைத் தொடர்ந்து இந்திய அணி வீராங்கனைகள் தொடர்ச்சியாக கோல் போட்டு தாய்லாந்து அணியைத் திணறடித்தனர். கடந்த உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான 8 கோல்கள் போட்டு அசத்திய தீபிகா, 8-வது, 9-வது, 24-வது, 33-வது, 36-வது, 39-வது, 51-வது மற்றும் 57வது நிமிடங்களில் கோல் போட்டு சாதனை படைத்தார்.

ருதுஜா தாதாசோ பிசல் 10-வது, 11-வது மற்றும் 47-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல்களை போட நேஹா கோயல் 19-வது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 26-வது நிமிடத்திலும் சாக்‌ஷி ராணா 29-வது நிமிடத்திலும் கேப்டன் சலிமா டெட்டே 45-வது நிமிடத்திலும் கோல் மழை பொழிந்தனர்.

தாய்லாந்து வீராங்கனை சுபான்சா சமன்சோ 57-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக ஆறுதல் கோல் போட்டார்.

போட்டி நேர முடிவில், இந்திய அணி 20-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி நடப்புத் தொடரில் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.

நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மகளிரணி, உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவுக்கு எதிராக முறையே 19-0 மற்றும் 17-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது.

Summary

In-form drag-flicker Deepika Sehrawat continued her impressive run, scoring a record nine goals in a single match as India thrashed Thailand 20-1 to register their third consecutive victory in Pool B of the women's hockey competition at the Asian Games here on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.