
100% வெற்றியுடன் முன்னேறிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி..! அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதல்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறித்து...

100% வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி..! பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை! - படங்கள்: எக்ஸ் / ஹாக்கி இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நான்கு குரூப் போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ஹாக்கி ஆடவர் அணி குரூப் ஏவில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இன்று நடைபெற்ற கடைசி லீக் சுற்றில் இந்திய அணி ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் 15ஆவது நிமிஷத்திலும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 40ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்து அசத்தினார்கள்.
முதல் போட்டியில் இந்தோனேஷியாவை 13-1 எனவும் இரண்டாவது போட்டியில் இலங்கையை 16-1 எனவும் மூன்றாவது போட்டியில் தென் கொரியாவை 8-2 எனவும் வீழ்த்தியது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி நான்கு போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தானுடன் அரையிறுதியில் மோதவிருக்கிறது.
ððððð¡ððð¡ð ðððð ð£ðð¢ð¡ð¦ ðð¡ð§ð¢ ð§ðð ð¦ðð ðð¦! ð®ð³ð¥
— Hockey India (@TheHockeyIndia) September 26, 2026
The Indian Menâs Team continues its winning run at the Asian Games 2026, beating Japan 2-0 to make it four wins from four and book a place in the Semi-Finals! ððª
The hunt for another Asian Games gold heads⦠pic.twitter.com/7tPrb7WIhv
Summary
Asian Games 2026: Indian Mens hockey team into the semifinals with clash Pakistan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






