
நடப்பு ஆசிய விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கம்..! வரலாற்றுச் சாதனை படைத்த குல்வீர் சிங்!
இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்றாவது பதக்கம் வென்ற குறித்து...

இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் - படம்: பிடிஐ
இந்திய தடகள வீரரும் ராணுவ வீரருமான குல்வீர் சிங் (28 வயது) நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்றாவது பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் இந்திய ராணுவத்தில் சுபேதாரராகப் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5,000 மீட்டர் தடகளத்தில் பந்தய தூரத்தை 13 நிமிஷங்கள் 32.75 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.
இந்தப் பிரிவில் பஹ்ரைன் வீரர் 13 நிமிஷங்கள் 30.79 விநாடிகளில் கடந்து தங்கமும் ஜப்பான் வீரர் 13 நிமிஷங்கள் 31.43 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றார்கள்.
நடப்பு ஆசிய விளையாட்டில் குல்வீர் சிங் 10,000 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் தடகளத்தில் வெள்ளி வென்றிருந்தார். தற்போது, 5,000 மீட்டர் போட்டியிலும் பதக்கம் வென்று ஹாட்ரிக் பதக்கத்துடன் புதிய சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக இந்தியாவின் பிடி உஷா ஒரே ஆசிய விளையாட்டில் மூன்று பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருந்தார். இதற்கடுத்து இரண்டாவது இந்தியராக, ஆடவர் பிரிவில் முதல் இந்தியராகவும் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை ஆசிய விளையாட்டு 2026ல் இந்தியாவுக்கு 49 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில், 5 தங்கம், 21 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
BRONZE SEALED. HAT-TRICK COMPLETE! ð¥ð¥ð¥
— Olympic Khelâ⢠(@OlympicKhel) September 29, 2026
Gulveer Singh wins bronze in the menâs 5000m at #AichiNagoya2026, securing his third medal of the Games. ð®ð³#AsianGames pic.twitter.com/FYDqcqsR6w
Summary
Gulveer Singh claims bronze in men's 5000m, becomes 2nd Indian to win 3 medals in one edition of Asian Games
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






