மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்திய அணியின் முதல் பயிற்சி ஆட்டம்: கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

ரோஹித் சர்மாவுடன் விளையாடவுள்ள தொடக்க வீரர் யார்?

News image
Updated On :18 அக்டோபர் 2021, 6:53 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தை இங்கிலாந்துக்கு எதிராக இன்று விளையாடுகிறது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் இன்று (அக்டோபர் 18) இங்கிலாந்தையும் அக்டோபர் 20 அன்று ஆஸ்திரேலியாவையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் இரவு 7.30 மணிக்கும் (இந்திய நேரம்) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மாலை 3.30 மணிக்கும் தொடங்கவுள்ளன. இந்திய அணி விளையாடும் பயிற்சி ஆட்டங்கள் ஸ்டார் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளன. 

இரு பயிற்சி ஆட்டங்களின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவுடன் விளையாடவுள்ள தொடக்க வீரர் யார்? இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலா ரிஷப் பந்தா? எந்தச் சுழற்பந்து வீச்சாளருக்கு இடம் கிடைக்கும்? பாண்டியா பந்துவீசுவாரா? அணியில் இடம்பெறவுள்ள மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்கிற இந்திய அணி தொடர்பான பல கேள்விகளுக்கும் பயிற்சி ஆட்டத்தில் விடை கிடைக்கும் என அறியப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.