சிறந்த பேட்ஸ்மேனாக மாற விரும்பும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்!

பந்துவீச்சாளராக மட்டுமின்றி சிறப்பான பேட்ஸ்மேனாகவும் மாற விரும்புவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மனம் திறந்துள்ளார்.
சிறந்த பேட்ஸ்மேனாக மாற விரும்பும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்!
படம் | AP

பந்துவீச்சாளராக மட்டுமின்றி சிறப்பான பேட்ஸ்மேனாகவும் மாற விரும்புவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மனம் திறந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று (ஜூன் 12) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் வெறும் 9 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த பேட்ஸ்மேனாக மாற விரும்பும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்!
சூப்பர் 8 சுற்றுக்கு குல்தீப் யாதவ் முக்கியம்: முன்னாள் இந்திய வீரர்

இந்த நிலையில், பந்துவீச்சாளராக மட்டுமின்றி சிறப்பான பேட்ஸ்மேனாகவும் மாற விரும்புவதாக அர்ஷ்தீப் சிங் மனம் திறந்துள்ளார். அதற்காக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம் பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங் படம் | AP

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் எப்போதும் கற்றுக் கொண்டிருக்கிறோம். எப்போதும் எங்களது பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் திறமைகளை வளர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஏனென்றால், அணிக்கு எப்போது ரன்கள் தேவைப்படும் என்பது தெரியாது. அது 2 ரன்களாக இருக்கலாம் அல்லது 4 ரன்களாக இருக்கலாம். எத்தனை ரன்கள் தேவைப்பட்டாலும் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுக்க வேண்டியிருக்கும். பந்துவீச்சாளராக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். எனது பேட்டிங் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com