
7-வது ஓவரிலிருந்து 15-வது ஓவர் வரை பேட்டிங் செய்வதை விரும்புவதாக இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 7-வது ஓவரிலிருந்து 15-வது ஓவர் வரை பேட்டிங் செய்வதை விரும்புவதாக இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டிக்கான இடைவெளியின்போது சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: 7-வது ஓவரிலிருந்து 15-வது ஓவர் வரை பேட்டிங் செய்வதை நான் விரும்புகிறேன். ஏனெனில், அந்த ஓவர்களுக்கு இடையே ரன்கள் குவிப்பது மிகவும் கடினம். அதனால், அந்த ஓவர்களுக்கு இடையே சிறப்பாக விளையாடுவதற்கு பயிற்சி செய்துள்ளேன். ரோஹித் சர்மாவுடன் இணைந்தும், அவரது தலைமையின் கீழும் நிறையப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். எனது ஆட்டத்தை அவர் புரிந்துகொள்வார். அதனால், என்னுடைய ஆட்டத்தை அவர் மகிழ்ச்சியாக ரசிப்பார் என்றார்.
இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் அதன் அடுத்தப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.