கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருமாவளவனின் வெற்றிக்கு காரணம் என்ன?

சிதம்பரம், மே 17:   தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டதாலும், திமுக கூட்டணியில் போட்டியிட்டதாலும் பாமக வேட்பாளர் இ.பொன்னுசாமியை விட தொல்.திருமாவளவன் 99,083 வாக்குகள் அதிகம் பெற்று வ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:20 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், மே 17:   தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டதாலும், திமுக கூட்டணியில் போட்டியிட்டதாலும் பாமக வேட்பாளர் இ.பொன்னுசாமியை விட தொல்.திருமாவளவன் 99,083 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

  சிதம்பரம் மக்களவைத் தொகுதி (தனி) தேர்தலில் தொல்.திருமாவளவன் 1999 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணியில் போட்டியிட்டு 2.25 லட்சம் வாக்குகள் பெற்றும், 2004 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.57 லட்சம் வாக்குகள் பெற்றும் பாமக வேட்பாளர் பொன்னுசாமியிடம் தோல்வியுற்று 2-ம் இடத்தை பெற்றார். தற்போது 3-வது முறையாக திமுக கூட்டணியில் போட்டியிட்டு 99,083 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  தனது வெற்றிக்கு மிகப்பெரிய கட்சியான திமுக கூட்டணிதான் காரணம் என்றும், நான் தவறான கூட்டணிக்கு சென்று விட்டதாக மருத்துவர் ராமதாஸ் கூறிவந்தார். அதற்கு நான் ராமதாஸ்தான் தவறான கூட்டணிக்கு சென்றுவிட்டார் என பதில் கூறி வந்தேன். யார் தவறான கூட்டணிக்கு சென்றுவிட்டார் என்பதை தேர்தல் முடிவில் தெரிந்துவிட்டது. திமுக கூட்டணியில் ராமதாஸ் இருந்ததால் 100க்கு 100 வெற்றி பெற்றிருப்பார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் ஏற்கனவே சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, மங்களூர் (தனி) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தது.

  தற்போது விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, மங்களூர் தொகுதிகள் நீக்கப்பட்டு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

திருமாவுக்கு கை கொடுத்த

3 பேரவை தொகுதிகள்:   தற்போது புதிதாக சேர்க்கப்பட்ட அரியலூர் தொகுதியில் 21,129 வாக்குகளும், குன்னம் தொகுதியில் 14,315 வாக்குகளும் பாமக வேட்பாளரை விட திருமாவளவன் அதிகம் பெற்றுள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 35,015 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் திருமாவளவன். ஜெயங்கொண்டம் தொகுதியில் 4 வாக்குகளும், சிதம்பரம் தொகுதியில் 12,193 வாக்குகளும், புவனகிரி தொகுதியில் 14,890 வாக்குகளும் பாமக வேட்பாளரை விட திருமாவளவன் கூடுதலாக பெற்றுள்ளார்.

  அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாளை அமரமூர்த்தியும், குன்னம் தொகுதிக்குட்பட்ட ஆண்டிமடம் சட்டமன்ற திமுக உறுப்பினர் எஸ்.சிவசங்கர், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள துரை.ரவிக்குமார் ஆகியோர் திருமாவளவன் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

  காட்டுமன்னார்கோவில் தொகுதியை அடங்கிய முட்டம் கிராமம் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொந்த ஊராகும். தலித் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகம் வாழும் தொகுதியான காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பாமக வேட்பாளரை விட 35,015 வாக்குகள் திருமாவளவன் அதிகம் பெற்றுள்ளார். திருமாவளவன் வெற்றிக்காக அவருடன் இணைந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தீவிரமாக தேர்தல் பணியாற்றியதுதான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

  பாமக வேட்பாளர் மீது அதிருப்தி: கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக இருந்த பாமக வேட்பாளர் இ.பொன்னுசாமி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, பாமக நிர்வாகிகளை சந்திக்கவில்லை. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என தொகுதி மக்களிடமும், கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தி உள்ளது என்பதை தேர்தல் முடிவு நிருபித்துள்ளது. குறிப்பாக பாமக நிர்வாகிகளே இத்தேர்தலில் பொன்னுசாமிக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

  தேர்தலில் பாமகவினர் அதிகம் பணத்தை செலவு செய்யாததும் தோல்விக்கு ஒரு காரணமாகும் என அவரது கட்சி நிர்வாகிகளே தெரிவிக்கின்றனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் பூத் ஏஜெண்டுகளுக்கு சரியாக பணம் வழங்கவில்லை. பாமக மற்றும் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் பணத்தை செலவு செய்யாமல் சுருட்டி விட்டனர் என்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் குற்றச்சாட்டு நிலவுகிறது.

  ஒட்டு மொத்தத்தில், பாமக வேட்பாளர் மீதான அதிருப்தி, திமுக கூட்டணி, தொகுதி மாற்றம் ஆகியவை சாதகமாக மாறி திருமாவளவனை 99,083 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியடையச் செய்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.