மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பறிபோகுது வாழ்விடம், பரிதவிக்கும் ஆதிவாசிகள்!

ஈரோடு: ஆதிவாசி மக்களுக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தில் இயற்கை வளம் இருப்பதை அறிந்த சிலர், அந்த இடத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாழ்விடம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் பரிதவித

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:00 pm

ஈரோடு: ஆதிவாசி மக்களுக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தில் இயற்கை வளம் இருப்பதை அறிந்த சிலர், அந்த இடத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாழ்விடம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் பரிதவித்துள்ளனர் ஆதிவாசி மக்கள்.  

  ஈரோடு மாவட்டம், பர்கூர் மேற்கு மலைப்பகுதியில் உள்ள அக்னிபாவி கிராமத்தில் 40 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் வகுப்பில் சோளகர் இனத்தை சேர்ந்த இவர்கள் வனத்துறை அனுமதியுடன் சீமார் புல் உள்ளிட்ட மலைகளில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து, அதில் கிடைக்கும் வருவாயினைக்  கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில்தான் இவர்களுக்கான வாழ்வாதரம் கிடைக்கிறது என்பதால், மலை முகடுகளில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.           

  வனவிலங்குகளால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் தங்கள் சமுதாய மக்களுக்கென குடியிருப்புப் பகுதி வேண்டுமென தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மலை முகடுகளில் குடியிருந்த சுமார் 36 குடும்பங்களை, வருவாய்த் துறையினர் கண்டறிந்தனர். இவர்களுக்கு கடந்த 1998-ம் ஆண்டில் அக்னிபாவி கிராமத்தில் மலைச்சரிவில் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. அங்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டுள்ள இடத்தையும், அதே ஆண்டில் வருவாய்த்துறையினர் அளவீடு செய்து கொடுத்துள்ளனர்.

 வாழ்வாதாரம் கருதி ஒருசிலர் மலை முகடுகளில் தொடர்ந்து குடியிருந்தாலும், பெரும்பாலானவர்கள் இந்த இடங்களில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு திடீரென இங்கு சென்ற வருவாய்த்துறையினர், இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது என்றும், இந்த இடத்தை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு இங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், வருவாய் துறையினரும், போலீஸôரும் அவ்வப்போது இம்மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

 11 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இந்த இடம் தற்போது தனியாருக்குச்  சொந்தமானது என்று கூறுவதற்கு காரணம் இந்த இடத்தில் கனிம வளம் (கிரானைட் கல்) இருப்பதாக கிடைத்த தகவல்தான் என்று கூறப்படுகிறது.

 இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது என்றாலும், மாற்று இடம் அளிக்காமல் இந்த மக்களை இங்கிருந்து வெளியேற்றும் முயற்சி, இவர்களின் உறவுகளை மீண்டும் மலை முகடுகளில் சிதறவைப்பதற்கு சமமானது. வருவாய்த் துறையின் கவனக்குறைவால் தங்களுக்கு இந்த இடம் இலவசமாக வழங்கப்பட்டிருந்தாலும், இப்பகுதியிலேயே மாற்று இடம் அளித்து, இலவசமாக தொகுப்பு வீடுகளை அமைத்துக்கொடுத்தால் இந்த இடத்திலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக இம்மக்கள் தெரிவித்தனர்.

  உறவுகளோடு ஒரே இடத்தில் வாழ நினைக்கும் அக்னிபாவி ஆதிவாசி மக்களுக்கு, இலவசமாக மனைப்பட்டா மற்றும் தொகுப்புவீடுகள் கிடைத்திட முதல்வர், துணை முதல்வர், மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்துவேன் என்று இம்மக்களை நேரில் சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உறுதியளித்துள்ளார்.  இந்த உறுதிமொழி செயல்வடிவம் பெறப்போகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இந்த ஆதிவாசி மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.