கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஊட்டம் தரும் "உரம் டீ'

சிதம்பரம், மார்ச்  10: தமிழக விவசாயிகள் நடவு செய்யும் பயிரில், தோட்டங்களில் வாட்டம் காணப்பட்டால் தழைச்சத்து தரும் யூரியா உரங்களை அதிகளவு பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. இதனால், குறுகிய கால வளர்ச்சி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:23 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், மார்ச்  10: தமிழக விவசாயிகள் நடவு செய்யும் பயிரில், தோட்டங்களில் வாட்டம் காணப்பட்டால் தழைச்சத்து தரும் யூரியா உரங்களை அதிகளவு பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது.

இதனால், குறுகிய கால வளர்ச்சி பயிரில் காணப்பட்டாலும் பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதலால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி மற்றும் இழப்புகளை சந்திக்கின்றனர். இத்தகைய சூழலில் அதிக மகசூல் மற்றும் லாபம் தரும் இயற்கை உர டீ பற்றி தமிழக விவசாயிகள் தெரிந்துகொள்வது அவசியம்.

 தயாரிக்கும் முறை: விவசாயிகள் தங்கள் தோட்டங்களில், வயல்களில் சுற்றி கிடைக்கும் 5 வித இலை, தழைகள்- 5 கிலோ, 5 கிலோ சாணம், அரை கிலோ நாட்டுச் சர்க்கரை இவை அனைத்தையும் ஒரு சணல் சாக்கில் மூட்டையாக கட்டிக் கொள்ளவும், இத்துடன் அரை கிலோ கல்லையும் சேர்த்து விடவும், பின்னர் இந்த மூட்டையை ஒரு பிளாஸ்டிக் கேனின் உள்ளே கவிழ்த்து வைக்கவும்.

மூட்டை மூழ்கியிருக்கும் வரை தண்ணீர் ஊற்றவும், இந்த மூட்டையை மேலும், கீழும் அசைப்பது போலாக கயிறு கட்டியிருக்க வேண்டும், தினமும் விவசாயிகள் அதை அசைத்தால் மூட்டைக்குள்ளிருக்கும் சாறு, கேன் தண்ணீரில் கலக்கும்.

அது அடுத்த இரண்டு வார காலத்தில் உரம் டீயாக தயாராகிவிடும். 10 லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து எல்லாவிதமான பயிர்களுக்கும், மரங்களுக்கும் இதை தெளிக்கலாம்.

 பிற பயன்கள்: உரம் டீ விவசாய பொருள்களைக் கொண்டே தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது. விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல், லாபம் இயற்கையில் பெற முடியும். பயிர்களுக்கு உரம் டீ கொடுத்தால் பயிர்கள் வேகமாக வளர்வதாக பாரம்பரியமிக்க விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, குறைந்த செலவில் அதிக லாபம் பெற இயற்கை உரம் டீயை தங்களது தோட்டத்திலேயே தயாரித்து வளம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி. ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

பயிர்களுக்கு தெளிக்க தயாரிக்கப்பட்டுள்ள இயற்கை உரம் டீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.