முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

சென்னை அருகே புதிய சுயநிதி மருத்துவக் கல்லூரி

சென்னை, ஜூலை 1: சென்னை போரூர் அருகே நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) புதிதாக 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் "மாதா மருத்துவக் கல்லூரி' தொடங்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில்

Published On :28 டிசம்பர் 2023, 9:17 pm IST

சென்னை, ஜூலை 1: சென்னை போரூர் அருகே நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) புதிதாக 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் "மாதா மருத்துவக் கல்லூரி' தொடங்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் சிறுபான்மை அந்தஸ்துடன் சுயநிதியில் தொடங்கப்படும் முதல் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாகும் இது.

மருத்துவக் கல்வி தேர்வுக் குழு மூலம் நடத்தப்படும் அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கு 75 எம்.பி.பி.எஸ். இடங்களை (50 சதவீத இடங்கள்) அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கல்லூரியின் தலைவர் பீட்டர் தெரிவித்தார். கடந்த 14 ஆண்டுகளாக மாதா பொறியியல் கல்லூரி, மாதா செவிலியர் கல்லூரி உள்ளிட்டவற்றை இந்தக் குழுமம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

11-வது சுயநிதி கல்லூரி: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி. உள்ளிட்ட 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து 767 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒன்பது சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்கெனவே ஒப்புதல் அளித்து விட்டது. திருச்சி அருகே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எஸ்ஆர்எம் குழுமம்) விரைவில் புதுப்பித்தல் அனுமதி கிடைத்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை போரூர் அருகே கோவூர் தண்டலத்தில் 11-வது சுயநிதி கல்லூரியாகத் தொடங்கப்பட்டுள்ள புதிய மாதா மருத்துவக் கல்லூரியிலிருந்தும் அரசு ஒதுக்கீட்டுக்கு 75 இடங்கள் கிடைக்க உள்ளது.

இதையடுத்து நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 842-ஆக அதிகரிக்கும்.

அதிக கட்-ஆஃப் காரணமாக...: அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு ஒதுக்கீட்டுக்கு மாதா மருத்துவக் கல்லூரி மூலம் மேலும் 75 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைப்பது மாணவர்களுக்கு சாதகமான அம்சமாகும்.

மற்ற கல்லூரிகளின் அடிப்படையில், மாதா மருத்துவக் கல்லூரியின் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.2.25 லட்சத்தை நீதிபதி குழு நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.